காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அதன் தாக்கம் அதிகம் எதிரொலிக்கிறது. பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் அணைகள் கட்டப்படவில்லை, மணல் கொள்ளை, அதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது, தண்ணீர் கடைமடைப் பகுதிகள் வரை நின்று நிதானித்துச் செல்லாமல், கடலில் கலப்பது என்று தங்கள் கருத்துகளைச் சொல்லி, இதுவரை ஆண்ட தமிழக அரசுகளின் மீது குறைகளைச் சொல்லுகின்றனர்.
இவற்றில் ஒரு கருத்தாக, தமிழா உன் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலம் வரும் கருத்து இது…
தமிழா! ஏன் உன் போராட்டம் இப்படி இருக்க கூடாது..?
தமிழக அரசே ஆந்திர அரசு போல நதிகளை இணை!!!
தமிழக அரசே குஜராத் அரசு போல தடுப்பணைகள் கட்டு
தமிழக அரசே கர்நாடக அரசு போல அணைகள் கட்டு!!
தமிழக அரசே கேரளா போல மணல் அள்ளுவதற்கு தடை விதி !!!
தமிழக அரசே உத்திரப்பிரதேச அரசு போல விவசாயிகளுக்கு சாண உரம் மற்றும் பால் மூலம் மாற்று வருவாய் வழங்கும் பசுக்கள் வதையை தடை செய் !!!
தமிழக அரசே ராஜஸ்தான் அரசு போல சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர் !!!
தமிழக அரசே மத்திய பிரதேச அரசு போல மண் பரிசோதனையை விவசாயிகளுக்கு வழங்கு !!!
தமிழக அரசே மகாராஷ்டிரா அரசு போல வறட்சியில் காப்பீடு பெறும் திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்!!!
தமிழக அரசே சிக்கிம் அரசு போல ஆர்கானிக் விவசாயத்திற்கு ஆதரவு கொடு !!!
தமிழக அரசே சட்டிஸ்கர் அரசு போல ஆன்லைன் சந்தையை விவசாயிகளுக்குக் கொடுத்து அதிக லாபம் பெற வழி செய் !!!
தமிழக அரசே வங்காளத்தை போல செயற்கை நீர் நிலைகளை உருவாக்கி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவி !!!
இப்படியும் ஆக்கபூர்வமாகப் போராடலாமே… #மாத்தியோசி