நக்கீரர் பெயரை நாசப்படுத்தும் நாதாரிகள்!

நக்கீரா நன்றாக என்னைப் பார் நான் எழுதிய பாடலில் குற்றமா என்று நக்கீரர் கேட்பதாக வரும் சினிமா வசனம் மிகவும் பிரபலமானது. திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்ற கதை.

திருவிளையாடல் படத்தில் வைக்கப்பட்ட காட்சியை கேட்டு ஆவேசமும் பெருமிதமும் பொங்க எண்ணியவர்கள் பலர்.

தமிழ் திரையுலகில் மிகப் பெரும் அளவில் பேசப்.பட்ட படம் என்று கூட சொல்லலாம் ..

நக்கீரர் …  சிவ பெருமானை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரு புலவர் ! தமிழ் சங்கத்தின் மூன்று சங்கங்களின் சங்கங்களுக்கும் வழிகாட்டியவர் ; தலைமை தாங்கியவர்!

அப்படிப்பட்ட நக்கீரர் சிவ பெருமான் எழுதிய பாடலில் குற்றம் கண்டு பிடித்து அதை நேருக்கு நேராக அவர் சிவபெருமானே என்று தெரிந்த.நிலையிலும் கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை புகழ்வதும் போற்றுவதும் உண்டு

தைரியத்துக்கும் தவறை கண்டு அஞ்சாத நிலைக்கும் நக்கீரரை உதாரணம் சொல்வது தமிழ் இலக்கிய மரபு!

ஆனால் அதே பெயரை வைத்துக் கொண்டு ஏதோ அநியாயத்தை தட்டிக் கேட்பது போல் ஒரு மாயையை பிம்பத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நக்கீரன் என்ற பத்திரிகை செய்யும் அடாவடிகள் கொஞ்ச நெஞ்சமல்ல; நக்கீரன் என்ற பத்திரிக்கையின் மூலம் அரசியல் பிரசாரம் நடக்கிறது என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது

இந்த அவப்பெயரை எக்காலத்திலும் துடைக்க முடியாது என்பது போல் தொடர்ந்து அந்த  மாபெரும் புலவனுக்கும் அவரது செயலுக்கு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது ஒரு பத்திரிகை அவர் பெயரை வைத்துக்கொண்டு மேலும் மேலும் கேவலப்படுத்துவது மிகமிக கொடூரமானது.

அப்படித்தான் இந்த விவகாரத்திலும் நக்கீரன் நடந்து கொண்டுள்ளது

பொள்ளாச்சி சம்பவம் உண்மையில் நடந்தது என்ன.

கட்சிக்காரர்களுக்கு அல்ல, சிந்திக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்.

பொள்ளாச்சி வழக்கில் நடந்தவை. கால வரிசைப்படி.

பாலியல் தொல்லை செய்ததாக ஆபாச கும்பல் மீது பெண் தன் வீட்டில் புகார்.

பெண் வீட்டார் உறவினர்கள் ஆபாச கும்பலை பிடித்து வைத்து அடித்தனர்.

ஆபாச கும்பல் தன் நண்பரான பார் நாகராஜ் உள்ளிட்டோரிடம் சொல்லியது. பார் நாகராஜ் ஆட்கள் பெண்ணின் அண்ணனை தாக்கினர். மேலும் ஆபாச கும்பல் பெண் வீட்டார் மீது போலிசில் புகாரும் அளித்தது. அதாவது ஆபாச கும்பல்தான் முதலில் தாங்கள் தாக்கப்பட்டதாக பெண் வீட்டார் மீது போலிசில் புகார் அளித்தது.

பெண் வீட்டார் தன் உறவினர் பழனிசாமி உடன் பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்து நடந்ததை சொன்னனர். பொள்ளாச்சி ஜெயராமன் தலையீட்டில் பெண்ணுக்கு உறுதி அளிக்கப்பட்டு முதன்முதலாக பாலியல் தொல்லை வழக்கு புகார் பதியப்பட்டது.

3 ஆபாச கும்பல் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்.

திருநாவுக்கரசு தலைமறைவு.

பொள்ளாச்சி ஜெயராமன்+ புகாரளித்த பெண் வீட்டார் இருப்பதை அறிந்த திருநாவுக்கரசு தலைமறைமாக உள்ளபோது ஆடியோ வெளியிட்டார். அதில் தனக்கு ஸ்டாலின் பாதுகாப்பளிக்க வேண்டும் என்றார்.

திருநாவுக்கரசு போலிசிடம் சிக்கினார்.

நக்கீரன் ஆபாச காணொளியை வெளியிட்டது. ஆளும் கட்சி தொடர்பு என்றது.

ஆக,

1) திருநாவுக்கரவு தலைமறைவாக இருந்தபோது அவரை தொடர்பு கொண்ட புள்ளிகள் யார்?

2) நக்கீரன் வெளியிட்ட ஆபாச விடியோவை நக்கீரனுக்கு அளித்தது யார்?

3) நக்கீரன் கோபால் மேலுள்ள காலவரிசையை மாற்றி, பெண் வீட்டார் போலிசில் போனதாகவும், போலிசு அதை எடுக்காமல் ஆளுங்கட்சிக்கு சொன்னதாகவும் கதை வசனம் எழுத சொல்லி தந்தது யார்?

4) தினமும் ஒன்று என நேற்று இணையத்துக்கு இன்னும் இரு விடியோக்களை தந்தது யார்?

5) நக்கீரன் கோபால் காணொளிகளை நேரடியாக விசாரணைக்கு தராமல், நீதிமன்றத்தை அணுகாமல் சமூகத்தில் இரு எடிட் செய்யப்பட்ட வசனங்களை போடுவது எதற்காக?

6) நக்கீரனால் மாணவர் போராட்டம் வெடிக்கும், கனிமொழி ஆவேசம் என்று சொன்னாலும், நக்கீரனில் தமிழ்நாடு பூரா பரவும் ஆபாச படங்களால் இனி எந்த பெண் புகார் அளிக்க வருவார்?

குறுகிய கால தேர்தல் ஆதாயத்துக்காகவும், குற்றவாளிகள் தப்பவும் இவை நடந்தேறுகிறதா?

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...