மைனாரிடி என்பது நீக்கப் பட வேண்டும்! பொது சிவில் சட்டம் கொண்டுவரப் பட வேண்டும்!

Published:

8 write down8 - 2026

மைனாரிட்டி என்பவர்கள் யார்? இதை நீதிபதிகளும் கேட்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பும் இன்று மைனாரிட்டிகள் எனக் கூறிக் கொள்ளும் கிருஷ்தவ இஸ்லாமியர்கள் தான் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இந்துக்களின் ஒருவன் மதம் மாறுவது அவனுக்கு அங்கு வசதிகள் கிடைக்கும் என்பதால் தான். ஆனால் அரசு இந்த மதம் மாறிகளை மைனாரிட்டி என்ற போர்வையில் அவர்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கப்படுதால் அவர்கள் தாய் மண்ணின் பண்பாட்டையும், தாய் மதத்தினையும், தாய் மத மக்களையும் அழிக்க முற்படுகின்றனர்.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1947ல் இருந்த மக்களின் நிலைக்கு ஏற்ப ஏற்படுத்தப் பட்டதாகும். அதிலுள்ள சில பிரிவுகள் இந்தியாவின் இஸ்லாமிய கிருஸ்தவ படையெடுப்புகளினால் பட்ட துன்பங்களை தாங்கி வாழ்ந்துகொண்டு, இந்த நாடு அழியாமல் காத்த இந்து மக்களுக்கு எதிராகவே உள்ளது.

படையெடுப்பாளர்க்கு ஆதரவாகவும், சுகபோக வாழ்வுக்காகவும் மதம் மாறியவர்கள் சுதந்திர இந்தியாவிலும் சுக போகங்களை அனுபவிக்கின்றனர். சுதந்திரத்திற்கு பிறகு மதம் மாறி மைனாரிட்டிகள் ஆகி அரசு சலுகை பெற பலர் கிருஷ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு கட்டுக்கடங்காமல் இந்துக்களில் பலர் மதம் மாறுகின்றனர்.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

இவர்களும் மைனாரிட்டிகளா? இவர்களுக்கு சலுகைகளை கொடுப்பது தகுமா? இவற்றை அரசு ஆராய வேண்டும்.

ஆகையால் மக்களில் மெஜாரிட்டி மைனாரிட்டி என இந்திய மக்களை பிரித்து நாட்டை சீர்குலைக்காமல் இருக்க மைனாரிட்டி என்ற சட்டப் பிரிவையே நீக்கிவிட வேண்டும். எல்லோரும் சமமென பிரகடனம் செய்ய வேண்டும்.

மத்திய  அரசு மதமாற்ற தடைசட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மதம்மாற விரும்புவர்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்.உள்ளது போல் நீதிமன்ற அனுமதி பெறவேண்டும்.

சில இன மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுதல், மது சினிமா இவற்றால் மரமண்டைகளாகி அவர்களின ஸடேட்டஸ் ஊயராமல் பினதங்கி விடுகின்றனர். வாங்கும் சம்பளத்தை மதுவுக்காக செலவழித்து விடுவதாலும்., மதுவால் கணவன் இறந்து போவதாலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும், பிள்ளைகளும் மதுப் பிரியர்களாகி பெண்கள் வீட்டுவேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறது.

தெலுங்கு திரவிட ஆட்சியாளர்கள் தமிழர்களை இழிநிலைக்கு தள்ளிவிட்டனர்.
தமிழ் நாட்டில் நரிக்குறவர், இருளர், பாம்பு பிடிக்கும் பிரிவினர், பழங்கால பூம்பூம் மாட்டுக்காரர் போன்ற பல ஜாதி பிரிவு மக்கள் சுதந்திரம் அடையும் போது எப்படி இருந்தார்களோ அதே நிலையில் தான் இன்றும் உள்ளனர். அவர்களின் பொருளாதார வாழ்க்கையோ, வாழ்க்கைத் தரமோ சிறிதும் உயரவில்லை!

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

80% அன்றாட வேலை செய்யும் மக்கள் ஏழைகளாகவே உள்ளனர். திருவண்ணாமலை கோயில், பழனி என பல ஆயிரக்கணக்கான மக்கள் பிச்சை எடுக்கின்றனர்!

எனவே மைனாரிட்டி என்ற ஷரத்து நீக்கப் படவேண்டும். அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம், ஒரே குடியுரிமை வசதி, ஒரே சட்டம், குறிப்பாக இதனாலேயே பொது சிவில் சட்டம் நாடு முழுதும் அமல்படுத்தப் படவேண்டும். இந்தியாவில் இந்தியனாகவும், இந்திய சட்டதிட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப் படுபவராகவும் இருக்க வேண்டும்.!

கருத்து: ~ சுவாதி

Related articles

Recent articles

spot_img