சென்னை: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் முடிவடைந்தன. தமிழகத்தில் மட்டும் 170 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வினை இன்று எழுதினர். இந்தத் தேர்வில் இயற்பியல் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் 10 இடங்களில் 170 மையங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த மையங்களில், ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் ஒரு மணி அளவில் தேர்வு நிறைவடைந்தது.
தேர்வு எழுதி முடித்து வெளியில் வந்த மாணவர்களிடம், நீட் தேர்வு குறித்து கேட்டபோது, வேதியியல், உயிரியல் பாடங்களில் கேள்விகள் எளிதாக இருந்தன, ஆனால் இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்று தெரிவித்தனர்.
சிபிஎஸ்இ., கல்வித் தரத்தில் இயற்பியல் பாடப் பிரிவில் கேள்விகள் கேட்கப் பட்டிருந்ததாகக் கூறிய மாணவர்கள், சற்று கூடுதலாக உழைத்திருந்தால் இயற்பியல் கேள்விகளும் எளிதானதாக இருந்திருக்கும் என்று கூறினர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கேள்விகள் எளிதாக கேட்கப் பட்டிருந்ததாக மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இருந்த போதிலும், சிபி.எஸ்.இ. தரத்தில் கேள்விகள் இருந்ததால் அரசுப் பள்ளி மாணவர்கள் சற்று தடுமாறியதாக பொதுவான கருத்து எழுந்துள்ளது. இதை வருங்காலங்களில் அரசுப் பள்ளிகள் சரி செய்யும் என்று நம்புவதாக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தெளிவான பà¯à®°à®¿à®¤à®²à¯ பாடதà¯à®¤à®¿à®²à¯ இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯ கடினமாக இரà¯à®•à¯à®• வாயà¯à®ªà¯à®ªà¯ இலà¯à®²à¯ˆ