16/10/2019 8:37 PM

கல்வி

கட்டணம் செலுத்தவில்லை என வெளியேற்றினால் நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

இருபத்தைந்தாயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ஆறாயிரம் ரூபாயை யுகிதாவின் தாய் செலுத்தியுள்ளார் . மீதி ரூபாயை உடனே செலுத்த வேண்டும் எனக்கூறி, காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியே அனுப்பியது.

காந்திஜியின் 150 வது பிறந்தநாள்! மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

மகாத்மா காந்தி குறித்து, கல்வி நிறுவனங்களில், ஓர் ஆண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசத்தந்தை...

இணையத்தில் வினாத்தாள் வெளியானது! 10,11,12 காலாண்டுத் தேர்வு!

குறிப்பாக 11ஆம் வகுப்புக்கான வணிகவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால் , நேற்று முன் தினமே அதற்கான வினாத்தாள் வெளியானது தெரிய வந்துள்ளது. மேலும், இன்று கம்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் வெளியானதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., நவ.2019 பருவத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

இன்று 16.09.2019 முதல் 30.09.2019 வரை அபராதம் இல்லாமல் தேர்வுகட்டணத்தை online ல் செலுத்தலாம்.

கலங்காதீங்க! காலாண்டு தேர்வு விடுமுறை உண்டாம்! பள்ளி கல்வித்துறை!

இந்நிலையில் விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.

தமிழக மாணவர்கள் வருத்தம்! கட்டான காலாண்டு விடுமுறை!

இந்த வகுப்புகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், காலாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்லும் நிலை உண்டாகியிருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை...

10,12 வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களில் ஒரே தாள்! அமைச்சர் செங்கோட்டையன்!

அதேநிலையில் தான் 10ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கும் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பள்ளி கழிவறையில் கள்ளக் காதல்! ஆசிரியரை அடித்து துவைத்த பெற்றோர்!

இதனை கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி.

2020ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு வருகிற நவம்பர் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.

தமிழக ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு ஆசிரியா்கள் அளிக்கபோகும் சிறப்பு பயிற்சி..?

அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம். அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள் என்று கூறினார்.

மாணவிகளிடம் சீண்டல்! தலைமை ஆசிரியர் கைது!

இதையடுத்து பெற்றோர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தலைமையாசிரியரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரம் மீண்டும் தகாத முறையில் நடக்க தலைமையாசிரியர் முயற்சித்ததாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடம்- மாணவர்களின் மகிழ்ச்சிகரமான இடமாக இருக்க வேண்டும்!

மாநில அரசின் இந்த முயற்சி மாணவர்கள், பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கத்தியுடன் பள்ளியில் நுழைந்து மாணவியை கடத்த முயன்ற இளைஞன் கைது!

அவர்களை கண்டதும் அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். ஆனால் சாலையில் அந்த நபரை மக்கல் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் கத்தியுடன் அந்த இளைஞரை ரணியல் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்த காவல்துறையினர், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சர்ச்சையான கேள்வித்தாள் விவகாரம்: போலியானது கேந்திரிய வித்யாலயா விளக்கம்..!

சி.பி.எஸ்.இ. நிர்வாகம், எந்த பள்ளிக்கும், எந்த வகுப்புக்கும் இடைத்தேர்வுக்கான வினாத்தாளை நாங்கள் தயாரிப்பதில்லை என்றும், பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாளை மட்டுமே தயாரிப்போம் எனவும் தெரிவித்து உள்ளது.

குறிக்கோளை நோக்கி பயணியுங்கள்! மாணவர்களுக்கு நெல்லை ஆட்சியர் அறிவுரை!

தொடர்ந்து மாணவர்களுடன் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், "நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் அவரவர் விருப்பங்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் அளிக்கும் வெளிநாட்டு பரிசு..!

இது போன்ற பாட திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வந்து 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

ஏன் பிரதமராகக் கூடாது? மாணவரிடம் கேட்ட பிரதமர்!

அதற்கு பதிலளித்த மோடி, ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது? என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர், ‘நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்? கூறுங்கள்’ என கேட்டுள்ளார்.

கிறிஸ்துவ பள்ளியில் வகுப்பறையில் தூக்கிட்டு மாணவி தற்கொலை!

இதனை அடுத்து பின்னர் வகுப்பறைக்கு வந்த சில மாணவிகள் பார்த்து அதிர்ச்சியாகி, பள்ளி நிர்வாகத்துக்கு சொல்ல அவர்கள் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்! மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

மோட்டார் சுவிட்ச் போட ஒரு மாணவனும் மோட்டாரில் தண்ணிர் ஊற்ற ஒரு மாணவனும் சென்றனர். இதில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் மகன் எட்டாம் வகுப்பு மாணவரான கார்த்தீஸ்வரன் (13) சென்றுள்ளனர். அப்போது மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பலியானார்.