மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பணி! TNPSC தேர்வாணையம்!

Published:

tnpsc - 2026

மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 626 காலி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் முடிவு செய்துள்ளது

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் (மே) 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசுத்துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தகுதி தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. குரூப்2, குரூப்2ஏ, குரூப்4 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதில் 4 ஆட்டோ மொபைல் என்ஜினீயர் பணிடங்களும், மின்துறையில் ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் பணிக்கு 8 காலியிடங்கள் உள்ளன.

66 வேளாண்மை துறை உதவி என்ஜினியர் பணியிடங்களும், 33 நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினியர் பணி காலியிடங்களும், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உதவி இயக்குனர் பணிக்கு 18 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

309 உதவி என்ஜினீயர் பணிக்கு பொதுப்பணித்துறையில் உள்ள காலியிடங்களும், மேலும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு மையத்தில் பணிபுரிய போர்மேன் பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளன.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

அதன்படி டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு 11 காலியிடங்களும், தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு சேவை துறையில் உதவி என்ஜினியர் பணிக்கு உள்ள 92 காலி பணியிடங்கள் என மொத்தம் 549 பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.

மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவி என்ஜினியர் பணிக்கு 64 காலிபணியிடங்கள் உள்ளன. மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தில் உதவி என்ஜினியர் பணிக்கு காலியாக உள்ள 13 இடங்களும் என மொத்தம் 77 இடங்களுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பிரிவுகளில் விண்ணப்பிக்க தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற மே மாதம் 3ம்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தேர்வு ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்து தேர்வு ஜூன் 26ம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஊதியம் 37 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் என தகுதி மற்றும் பிரிவு வாரியாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img