images 59 - 2026

ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1.68 லட்சம் கோடி ..

சற்றுமுன்

ஏப்ரல் 2022 ஜி.எஸ்.டி.வசூல் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

ஏப்., மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,67,540 கோடியில்
சிஜிஎஸ்டி – ரூ.33,159 கோடி
எஸ்ஜிஎஸ்டி- ரூ.41,793 கோடி
ஐஜிஎஸ்டி- ரூ.81,939 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.36,705 கோடி உட்பட)
செஸ்-ரூ.10,649 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.857 கோடி உட்பட) அடங்கும்.
இந்த வசூலானது, கடந்த ஆண்டு(2021) ஏப்.மாதம் வசூலான 1.42 லட்சம் கோடியை காட்டிலும் ரூ.25 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இதற்கு முன்னர் மார்ச் மாதம் வசூலான 1.42 லட்சம் கோடி தான் அதிகமாக இருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
images 59 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.