
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின் இந்தியா துரித நடவடிகை எடுத்து வருகிறது., இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது…
The willpower of 140 crore Indians will now break the backbone of the masters of terrorism
நண்பர்களே, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று, ஜம்முகஷ்மீரத்தின் பஹல்காவிலே, தீவிரவாதிகள், அப்பாவி நாட்டுமக்களை, மிகக் கொடூரமான முறையிலே கொன்றார்கள். இதனால், மொத்த தேசமும் சோகத்தில் இருக்கிறது, கோடானுகோடி நாட்டுமக்கள் துக்கத்தில் இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தாரின் துக்கத்திலே, மொத்த தேசமும், அவர்களுக்குத் துணையாக நிற்கிறது. எந்தக் குடும்ப உறுப்பினர்களின், சிகிச்சை இப்போது நடக்கிறதோ, அவர்கள் விரைவாக நலம்பெற வேண்டும், என்பதற்காகவும் அரசாங்கம், அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே, இந்தத் தீவிரவாதத் தாக்குதலிலே, சிலர் தங்களுடைய மகனை இழந்திருக்கிறார்கள், சிலர் தங்கள் சகோதரனை இழந்திருக்கிறார்கள், சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்திருக்கிறார்கள். அவர்களிலே சிலர், வங்காள மொழி பேசுபவர்கள், சிலர் கன்னடம் பேசுபவர்கள், சிலர் மராட்டியர்கள், சிலர் ஒடியா பேசுபவர்கள், சிலர் குஜராத்திகள், ஒரு சிலரோ இந்த பிஹாரின் மைந்தர்கள்.
இன்று இந்த அனைவரின் மரணத்தின் மீது, கர்கில் முதல் கன்னியாகுமாரி வரை, நம்முடைய துக்கம், ஒரே மாதிரியாக இருக்கிறது. நம்முடைய ஆக்ரோஷம், ஒன்று போலவே இருக்கிறது. இந்தத் தாக்குதல், வெறும், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது மட்டும் நடக்கவில்லை.
தேசத்தின் எதிரிகள், பாரதத்தின் ஆன்மாவின் மீது, தாக்குதல் தொடுக்கும் குற்றத்தைப் புரிந்திருக்கின்றார்கள். நான் மிகவும் தெளிவான சொற்களில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், யாரெல்லாம், இந்தத் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றார்களோ, அந்தத் தீவிரவாதிகளுக்கும், இந்த சூழ்ச்சியைத் திட்டமிட்ட வஞ்சகர்களுக்கும், அவர்கள் கற்பனையைத் தாண்டி பெரிய, தண்டனை தரப்படும். தண்டனை கண்டிப்பாக கிடைத்தே தீரும். இப்போது தீவிரவாதிகளுடைய, தப்பிப் பிழைத்திருக்கும் நிலப்பகுதியையும், தரைமட்டமாக்கும் நேரம் வந்து விட்டது. நூற்றி நாற்பது, 140 கோடி, பாரத நாட்டவரின், உறுதிப்பாடு, இப்போது தீவிரவாதிகளின் ஆதரவாளர்களின், முதுகெலும்பை உடைத்தே தீரும்.
India will identify, track, and punish every terrorist, their handlers, and their backers
நண்பர்களே, இன்று, பிஹாரின் இந்த மண்ணிலிருந்து, நான் உலகனைத்திற்கும் தெரிவிக்க விரும்புகிறேன், இந்தியா கண்டிப்பாக, ஒவ்வொரு தீவிரவாதியையும், அவர்களின், ஆதரவாளர்களையும், அடையாளம் கண்டு, தேடிப்பிடித்து தண்டனை கொடுக்கும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களைத் துரத்திப் பிடிப்போம். இந்தியாவின் ஊக்கத்தை எந்தத் தீவிரவாதத்தாலும் சாய்க்க முடியாது. தீவிரவாதம் எக்காலத்திலும் தண்டனையிலிருந்து, தப்பிவிட முடியாது.
நீதி கிடைப்பதற்கான அனைத்து வகையான, முயற்சிகளையும் நாங்கள் எடுத்தே தீருவோம். நாடு முழுவதும் இந்த நிலைப்பாட்டிலே, உறுதியாக இருக்கிறது. மனிதம் மீதான, நம்பிக்கை உள்ள அனைவரும், எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நான் பன்னாட்டு மக்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும், என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இப்போது எங்களுக்கு, துணையாக இருந்தார்கள். – என்று குறிப்பிட்டுள்ளார்.





