ஏப்ரல் 14, 2021, 12:49 காலை புதன்கிழமை
More

  தினசரி ஒரு வேத வாக்கியம்: 3​5​. ஹ்ருதயம் எங்கே உள்ளது?

  ஹ்ருதய குஹர மத்யே கேவலம் ப்ரஹ்ம மாத்ரம் அஹமஹமிதி சாக்ஷாதாத்ம ரூபேணபாதி ஹ்ருதிவிச மனசா ஸ்வம் சின்மதா மத்யதானாம் பவன

  Dhinasari Jothidam

  3​5​. ஹ்ருதயம் எங்கே உள்ளது?

  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
  தமிழில்: ராஜி ரகுநாதன் 

  “பத்மகோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்” – மந்திர புஷ்பம் (யஜுர் வேதம், தைத்ரீய ஆரண்யகம்)

  “கழுத்திற்கு கீழே நாபிக்கு மேலே 12 அங்குல பிரமாணம் கொண்டு தலைகீழ் தாமரை மொட்டு போல ஹ்ருதயம் நிலை கொண்டுள்ளது”.

  வேதக் கலாச்சாரம் எத்தனை விசாலமானது என்பது சற்று  சிந்தித்தாலே புரிந்து போகும்.இத்தகைய கலாச்சாரத்தில் பிறந்ததை விட பாக்கியம் வேறு ஒன்றும் இல்லை என்பதும் புரியும்.

  கடவுளை வழிபட வேண்டும் என்பது அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது. ஆனால் பகவானை எவ்வாறு வழிபடுவது? எங்கே வழிபடுவது? என்ற அற்புதமான வழிமுறை பாரத கலாச்சாரத்தில் காணப்படுகிறது.

  பாஹ்யமாகப் பார்த்தால் சூரிய மண்டலத்தில், சந்திரமண்டலத்தில், அக்னியில், ஜலத்தில், பிரதிமையில், தன் இதயத்தில் பகவானை வழிபட வேண்டும்.

  கடவுள் சர்வ வியாபகன். எங்கும்  நிறைந்திருப்பவன். ஆனால் அவனை உணரக்கூடிய ஸ்தானங்கள் இவை. கங்கை நதி விரிந்து பிரவகித்தாலும் இறங்கிக் குளிப்பதற்கு படித்றைகள் இருப்பது போல பகவானுடைய இடங்கள் இவை.

  சூரியனை ஆராதனை செய்தால் அது கடவுளிடம் சென்று சேர்கிறது. நமக்கு அருகில் உள்ளது இதயமே. ஆனாலும் வரிசையில் இறுதியாக கூறியுள்ளார்கள். ஏனென்றால் நாம் நம் இதயத்தைத் தவிர நம்மைச் சுற்றிலும் தேட கூடியவர்கள் என்பதால் சூரியனிடமிருந்து தொடங்கியுள்ளார்கள். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்து இதயத்தில் தியானிக்க வேண்டும்.

  இதயத்தில் தியானிப்பது என்ற செய்கைக்கு பத்மாசனம் போட்டு கண்களை மூடி பிராணாயாமம் செய்து பார்வையை இதயத்தில் நிறுத்துவது என்று பொருள்.

  இந்தச் செயல்முறை அதிர்ஷ்டவசமாக ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளது.

  இதயத்தில் அற்புதமான சூட்சும ஒளி பொருந்திய பகவான் உள்ளான். அவனுடைய  சைதன்யம் இதயம் முழுவதும் வியாபித்து அதன்மூலம் நாடிககளில் பிரவகித்து, சரீரம் முழுவதும் பரவுகிறது.

  எந்த இறைவன் சூரிய மண்டலத்தில் உள்ளானோ, ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் இவற்றைச் செய்கிறானோ, விஸ்வமெங்கும் வியாபித்து உள்ளானோ… அந்த இறைவனே நம் இதயத்திலும் உள்ளான். சிவனா விஷ்ணுவா அம்பிகையா என்ற சந்தேகமின்றி நம் இதயத்திலேயே தியானிக்கலாம்.

  “ஸப்ரஹ்ம: ஸசிவ: ஸஹரி: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம ஸ்வராட்”   என்று வேதமாதா கூறுகிறாள். அவனே பிரம்மா, விஷ்ணு, இந்திரன் என்று அனைத்து கடவுளர்களும் ஒன்றான பகவான் ஒருவனே என்று பரமாத்மாவின் சைதன்யத்தை இதயத்தில் தியானிக்க வேண்டும்.

  யார் ஹ்ருதய குகையின் மத்தியில் ‘நான்’ என்ற சத்தியமாக உணரப்படுகிறாரோ அவரே பரமாத்மா என்று ரமண மகரிஷி கூறுகிறார்.

  “ஹ்ருதய குஹர மத்யே கேவலம் ப்ரஹ்ம மாத்ரம் அஹமஹமிதி சாக்ஷாதாத்ம ரூபேணபாதி ஹ்ருதிவிச மனசா ஸ்வம் சின்மதா மத்யதானாம் பவன சலனரோதாதாத்மனிஷ்டோ பவேத்வம்” என்று ஆத்மாவை அறிந்த யோகிகள் சுய அனுபவத்தால் கூறியுள்ளார்கள்.

  நம் ஹ்ருதயத்தில் இருந்து பிரதானமான சுஷும்னா நாடி சீர்ஷம் வரை தொட்டபடி இருக்கும். அந்தக் இருதயத்திலிருந்து அனைத்து நாடிகளும் சக்தியைப் பெறுகின்றன.

  “சதம் சைகாத் ஹ்ருதயஸ்ய நாட்ய:” என்று கடோபநிஷத் கூறுகிறது. யோக சாஸ்திரம் முழுமையும் ஹ்ருதயம் மீதும், நாடி மண்டல அமைப்பு மீதும், பிராணசக்தி மீதும் ஆதாரப்பட்டுள்ளது.

  “ஹ்ருதயம் வலது பக்கம் உள்ளது. அங்கு பரமாத்மா உள்ளார். அதனால் தெற்குப் பக்கம் இருப்பதே பகவத் ஸ்தானம். அது அமூர்த்தம். அதனால் தெற்குப்புறம் எந்த மூர்த்தி வடிவமும் இல்லாமல் இருக்கும் ஈஸ்வர தேஜஸ் தட்சிணாமூர்த்தி” என்று ரமண மகரிஷி விளக்கமளித்தார்.

  பிரதானமாக நாபி, ஹ்ருதயம், கழுத்து, புருவமத்தியில், சஹஸ்ராரத்தில் பார்வையை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும்.

  பகவத்  ஸ்தானம் நம்மிலேயே உள்ளது. ஹ்ருதயமே பகவந்  நிலயம் என்ற வேத வாக்கியத்தை வணங்குவோம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  18 + six =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »