
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Zero contribution by India towards Science & Technology – இந்தியர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் தெரியாது”.
அறிவியல் சாஸ்திரத்தின் சூரியன் மேற்கில் உதித்தான் என்றும் கீழை நாடுகளுக்கு சயின்ஸ் தெரியாது என்றும் துஷ்ட பிரசாரம் செய்தனர் பிரிடிஷார்.
இது போன்ற தீய கருத்து தீவிரமாக பிரசாரம் செய்யப்பட்டதால் நமக்கு ஒரு விஞ்ஞானப் பரம்பரை இருக்கிறது என்று யாராவது உண்மையை வெளிப்படுத்தினால் வந்தேறிகளின் மானசிக புதல்வர்களும் இடது சாரிகளும் கடுமையாக எதிர்ப்பார்கள். நம் தத்தையர் குரங்குகள், அநாகரிகமானவர்கள் என்றால் இவர்களுக்கு மகிழ்ச்சி. அது ஒரு மனோவியாதி.
விஞ்ஞானத்திற்கு ஏற்பில்லாத சாஸ்திரங்கள் நம்முடையவை என்று நிந்தித்து போலி மேதாவிகளும் இடது சாரிகளும் எழுதிவருகிறார்கள். இது போன்ற போலி மேதாவிகளின் கும்பல் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் சீற்றம் கொண்டது. தேர்தல் நேரத்தில் தம் பங்கு கடமையாக தேசிய வாதிகளின் மேல் சேறு வாரி இறைத்தன இந்தப் பன்றிகள். சுமார் 240 பேர் ஒன்றிணைந்து தேசபக்தி யானைகளைப் பார்த்து வாய் பிளந்து குரைத்த காட்சி அது. அவர்களில் சிலர் ‘அவார்ட் வாப்ஸ்’ செய்த அறிவாளிகள். “பரிசோதனைச் சாலைகளில் மூச்சுத் திணறும் ஆய்வுகளில் ஆழ்ந்திருந்தவர்கள் இவ்வாறு தெருவுக்கு வருவது இதுவே முதல் முறை” என்று அறிவித்துக் கொண்டார்கள். அது முதல் தடவையும் இல்லை… கடைசி அழுகையும் இல்லை. தேசியவாத அரசாங்கம் அரியணை ஏறியதை விரும்பாத கும்பல் தேர்தலின் முன்பாக ஓலமிடும் ஒப்பாரி அது.
விஞ்ஞான விஷயத்தில் நம் தேசம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த சிகரங்களை எட்டி உள்ளதென்ற உண்மை இவர்களுக்குத் தலையில் ஏறாது. வேத கணிதத்தை பள்ளிகளில் சேர்க்கலாம் என்றால் “காஷாய வண்ணம் பூசாதே!” என்று கூச்சலிட்ட ஒரு போலி மேதாவிக்கு வேத கணிதத்திலுள்ள சூத்திரங்களை இந்த கட்டுரை ஆசிரியர் விவரித்தபோது ஆர்வத்தோடு கேட்டு, “ஆகா! இது நன்றாக உள்ளதே!” என்று வியந்து போனார்.
அரசியலையும் மதத்தோடு தொடர்புடைய கருத்துக்களையும் விஞ்ஞான சாஸ்திரத்தோடு கலக்கக் கூடாது என்று நோபல் விருது பெற்ற பிரபல விஞ்ஞானி டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷணன் எச்சரித்தார். பூமி தட்டையாக இருக்கிறது என்றால் இல்லை என்று மறுத்த கோபர்நிகசை என்ன செய்தார்கள் என்று அவருக்குத் தெரிந்துதான் இதைக் கூறினார்.
இந்தியப் போலி மேதாவி ஒருவர் 2014 ல் நடந்த அரசியல் மாற்றங்களால் ஆத்திரம் அடைந்தார். தேர்தலில் தேசபக்தர்கள் வெற்றிபெறுவதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல், சிரமப்பட்டு ‘லாபியிங்’ செய்து சம்பாதித்த பத்மபூஷன் விருதைத் தியாகம் செய்தார்.
டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியது போல் பாரபட்சமின்றி, தான் பிறந்து வளர்ந்த கிறிஸ்தவ மதத்தை ஒதுக்கிவைத்து விட்டு நம் சாஸ்திர விஞ்ஞானத்தை வாய்நிறையப் புகழும் வெளிநாட்டுக்காரர்களும் இல்லாமல் இல்லை. அவர்களின் உண்மையான் சொற்கள் பண்டைய இந்தியக் கலைகளின் மேல் நமக்குள்ள மதிப்பை அதிகரிக்கும்.
“இந்திய வேதாந்தம் குறித்து சிலரோடு செய்த விவாதத்தின் பலனாக அப்போது வரை குழப்பிய குவாண்டம் பிசிக்ஸ் சூத்திரங்கள் எனக்கு பொருள் புரிந்தன” என்று நோபல் விருது பெற்ற ‘வென்னர் ஹைசன்பர்க்’ தெரிவித்தார்.
பாரதமாதாவின் புதல்வர்களே தம் தாயின் உயர்வையும் சிறப்பையும் அங்கீகரிக்காமல் போவதற்கு என்ன கரணம்?
“நவீன பௌதிக விஞ்ஞானத்தில் வெற்றிகளாகப் பெயர் வாங்கியவையனைத்தும் புராதன ஹைந்தவ ஞானத்திலிருந்து வந்தவையே” என்று ‘ஓபன் ஹீமர்’ போன்ற அணு விஞ்ஞானிகள் கூறியுள்ளதை அறியாதவர் இருக்க முடியாது. ஆனால் அதே வார்த்தையை நம் பாரத பிரதமரோ பிற தலைவர்களோ கூறினால் இந்திய போலி மேதாவிகளுக்கும் வந்தேறிகளின் அடிவருடிகளுக்கும் பிடிக்காது. பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி சுஸ்ருதர் போன்ற முனிவர்கள் என்று சொன்னால் இவர்களுக்கு தேளும் பூரானும் ஊர்வது போலிருப்பது ஏனோ?
விமானவியலுக்கு பாரத்வாஜ மகரிஷிதான் முன்னோடி என்றால் இவர்களுக்கு வயிறு எரிவது ஏனோ? நாடெங்கும் பொறியியல் மாணவர்களுக்கு நிச்சயமாக ‘பாரதிய ஞான அமைப்புகள்’ என்ற பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தவர்கள் மீது இவர்களுக்கு கழுத்து வரை கோபம் வந்தது.
இது போன்ற மனநிலைக்கு என்ன காரணம்?
“இப்போதுள்ள கல்விமுறை இந்த செய்திகளை மாணவர்களுக்கு அளிப்பதில்லை. ஞான தேசமான பாரத தேசம், யுகயுகங்களாக மகரிஷிகளின் தவச் சக்தியால் கண்டறியப்பட்ட தெய்வீக ஞானத்தையும் பௌதிக, தார்மிக ஆன்மீக ரகசியங்களையும் உலகிற்கு அளித்து வந்தது. பிற மத படையெடுப்புகளாலும் சுதேசிகளின் உதாசீனமான அலட்சியத்தாலும் புறக்கணிக்கப்பட்ட புராதன வைபவம், ஆச்சரியப்படும் வண்ணம் இன்று கண்ணுக்குத் தென்படாத நீரோடை போலாவது மீதி உள்ளது” என்கிறார் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
“நவீன வித்யாஸு தினேதினேஹி
தோஷா: ப்ரத்ருஷ்டா பஹிவஸ்த தாபி: !
நிர்தோஷ வேதோ யதி தத்விருத்தோ
நக்ராஹ்ய ஏவேதி விசித்ரவாத: !!
பொருள்: சயின்ஸ் தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு தினம் தினம் வளர்ச்சி அடைகிறது. ஆனால் வேதங்களில் தவறுகளே காணப்படாது. அப்படிப்பட்ட வேதம் சயின்சுக்கு ஏற்ப இருக்கவேண்டும் என்று வாதம் புரிவது விந்தையானது” என்கிறார் ஸ்ரீஜடாவல்லபுல புருஷோத்தம்
இன்றைய இளைய தலைமுறை மேல்நாட்டு வாழ்க்கை முறைகளால் ஈர்க்கப்படுகிறார்கள். ‘விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எல்லாம் மேல்நாட்டார் அளித்த வரம்’ என்று கருதுகிறார்கள். பாரத தேசம் தர்மங்களை உபதேசிப்பதில் உயர்ந்த சிகரங்களை எட்டியது என்று கூறினால் ஒரு வேளை அங்கீகரிப்பார்கள். ஆனால் விஞ்ஞானத்தை பொறுத்தவரை பாரததேசமெங்கும் இருள் சூழ்ந்திருந்தது என்று நம்புபவர்களே அதிகம். இந்த எண்ணத்தின் காரணமாகவே மேல்நாட்டை அனுசரிப்பவர்கள் அதிகமாகிறார்கள்.
‘நம் மீது நமக்கு நம்பிக்கை இன்மை’ என்ற நோய் நம்மைப் பீடித்துள்ளது. புராதன காலத்தில் பாரத தேசத்தில் கண்டறிந்து சாதித்த பரிசோதனைகளையும் வெற்றிகளையும் பாரபட்சமின்றி மதிப்பாய்வு செய்தால் இன்றைய இளைய தலைமுறை உண்மையை உணரும். புராதன காலத்தில் பராத தேசத்தில் தயாரித்த உற்பத்திகளையும் கட்டடங்களையும் சரியாக ஆய்வு செய்தால் விஞ்ஞானத்தில் நாம் எட்டிய சிகரங்கள் தரிசனமளிக்கும்.
‘ஜேம்ஸ் பர்குசன்’ தான் எழுதிய History of Indian and Eastern Architecture என்ற நூலின் முன்னுரையில், “இந்திய கட்டிடக் கலை ஒரு உயிருள்ள கலை. இந்திய கலையின் யதார்த்த மூல சூத்திரங்களை இன்றளவும் கடைபிடித்துப் பார்க்க முடியும். இதனை ஆதாரமாகக் கொண்டே ஐரோப்பாவில் கட்டிடக் கலை வளர்ந்தது” என்று கூறுகிறார். இந்தியர்கள் நிர்மாணித்த சிறந்த மாளிகைகளை காணக் கூடியவர்கள் இந்தத் துறையில் வெற்றிக்கான வழிகளை கண்டறிய முடியும் என்பதில் ஐயமில்லை.
கிபி 3000வது ஆண்டிலேயே மொகன்ஜோதாரா நாகரிகம் முழு வளர்ச்சி பெற்றிருந்தது தெரிகிறது. இந்த கட்டடங்களை ஆய்வு செய்தால் அவற்றைக் கட்டியவர்கள் எத்தகைய உயர்ந்த விஞ்ஞானிகள் என்பது புரியும். எந்த அறிவியல் அறிவும் இல்லாமல்தான் அவர்களால் இத்தகைய பெரிய கட்டிடங்களை கட்ட முடிந்ததா? கலையுணர்வோடும் உயர்ந்த தரத்தோடும் இவற்றைக் கட்டிய சிற்பக் கலைஞர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
சம்பிரதாயத் திறமை பெற்ற இந்திய சிற்பிகள், முதலில் மரத்தால் செய்த கட்டமைப்புகளை சூட்சுமத்திலும் சூட்சுமமான விவரங்களோடு சிலைகளைச் செதுக்கினார்கள். ஏழிலிருந்து பத்தாவது நூற்றாண்டு வரையான காலத்தில் சிலைகளைச் செதுக்கும் சிற்பக் கலை மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்திருந்தது. மனிதனின் கற்பனைக்கு எட்டாத மாபெரும் கோவில்களும் மாளிகைகளும் நிர்மாணிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா கைலாச நாதர் கோவில் பண்டைக்கால அற்புத சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது உலகிலேயே மிகப் பெரிய ஒற்றைக் கல் கோவில். மேலிருந்து தொடங்கப்பட்டு கீழ்நோக்கி செதுக்கப்பட்ட விஞ்ஞான வைபவம் இந்த தெய்வீக கலைக் கோயிலில் காணப்படுகிறது.
அகண்ட பாரத தேசத்தில் சிந்து பகுதியில் கிடைத்துள்ள அபூர்வ குளியல்துறை பண்டைய விஞ்ஞான அறிவுக்கு ஒரு சான்று. 11.89X7.01X2.4 மீட்டர் அளவுகளில் இருக்கும் குளியல் துறை அரச மாளிகை வளாகத்தில் உள்ளது. எத்தனை அறிவியல் அறிவு இருந்தால் இது போன்ற கட்டடங்களை கட்டியிருக்க முடியும்? சித்தித்துப் பார்த்தால் வியப்பு உண்டாகும்.
குஜராத்தில் உள்ள ஹரப்பாவின் ‘லோத்தால் கப்பல்துறை’ கட்டமைப்பு பண்டைய இந்தியர்களின் மற்றுமொரு விஞ்ஞான அற்புதம். சமுத்திர பிரவாகத்தின் வேகத்தைக் கணக்கில் கொண்டு இதன் நிர்மாணம் நடந்துள்ளது. கடலின் அலைக்கழிப்பை உணர்ந்து கட்டப்பட்ட துறைமுகப் பட்டணம் இது. குறைந்த அளவு ஆழம் குறையாமல பாதுகாத்து, கப்பல்கள் மிதக்கும்படி செய்த இந்த கட்டமைப்பு நவீன விஞ்ஞானிகளுக்கு இன்றளவும் வியப்பை அளிக்கிறது.
நிலவியல் விஞ்ஞானம்:-
கிறிஸ்தவ மத நூலில் கூறியபடி பூமி தட்டையாக இல்லை என்றும் உருண்டையாக இருக்கிறது என்றும் கூறியவர்களை தண்டித்த (கொபர்னிகஸ் 1473-1543) காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (பொ.ஆ499) இந்தியாவில் பூகோள விஞ்ஞானி ஆரியபட்டர் எழுதிய ஆரியபட்டீயம் என்ற நூலில் 45வது பிரகரணத்தில் 6வது செய்யுளைப் பார்ப்போம்…
வ்ருத்தப பஞ்சரமத்யே கக்ஷ்யாபரிவேஷ்டித: க மத்தியகத:
ம்ருஜ்ஞசலசிப்ரி: வாயுமயோ பூகோல: சர்வதோவ்ருத்த:
பொருள்: பூகோளம் வட்ட வடிவில் விண்வெளியின் நடுவில் தொங்கிக் கொண்டிருகிறது. கிரக சுற்றுப்பாதைகளால் சூழப்பட்டு நிலவியல் மத்தியில் நீர், மண், நெருப்பு, வாயுவோடு கூட இருக்கிறது.
பூகோளம் என்ற சொல் இந்தியர்களுக்கு புராதன காலத்திலிருந்தே தெரியும். கிரகச் சுழற்சியின் காலத்தை ஆரியபட்டர் கணக்கிட்டு என்ன கூறினார்? நவீன விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்…
- கிரகம்-பூமி (தன்னைத் தான் சுற்றி)–ஆரியபட்டரின் கண்டுபிடிப்பு -365.258 நாட்கள்.
நவீன விஞ்ஞானிகளின் கூறுவது –365.265 நாட்கள். - சந்திரன் (பூமியைச் சுற்றி)- ஆரியபட்டர்- 27.322 நாட்கள்
நவீன விஞ்ஞானிகள் -27.322 நாட்கள் - செவ்வாய்- ஆரியபட்டர் – 1.881 ஆண்டுகள்
நவீன விஞ்ஞானிகள் – 1.881 ஆண்டுகள் - வியாழன் – ஆரியபட்டர்-11.861 ஆண்டுகள்
நவீன விஞ்ஞானிகள் -11.862 ஆண்டுகள் - சனி – ஆரியபட்டர் -29.477 ஆண்டுகள்
நவீன விஞ்ஞானிகள் -29.458 ஆண்டுகள்
பாஸ்கராசாரியார், ஆரியபட்டர், நீலகண்டர் முதலானவர்கள் பாரதிய வானியல் விஞ்ஞானத்தின் முன்னோடிகள். எந்த விதமான விஞ்ஞான அறிவும் இல்லாமலே இவற்றை கண்டுபிடித்தார்களா? நவீன கருவிகளான டெலஸ்கோப் போன்றவை இல்லாமலே சூரியோதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றின் துல்லியமான நேரங்களையும் கிரகணங்கள் போன்ற வானியல் அற்புதங்களையும் கண்டுபிடிக்கும் பஞ்சாங்க அறிஞர்கள் விஞ்ஞானிகள் அல்லரா? ஆங்கிலம் அவர்களுக்கு வராவிட்டால் அறிஞர்கள் அல்லாமல் போய்விடுவார்களா?
வேதியியல் விஞ்ஞானம்:-
தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், தகரம் போன்ற உலோகங்களைப் பற்றி வேதங்களில் உள்ளது. இந்த உலோகங்களை சுத்தம் செய்து ஔஷதங்களாக பயன்படுத்தும் செயல்முறைகளை நம் ஆயுர்வேத நூல்களில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்தார்கள்.
அப்போதிருந்த நாலந்தா, உத்தண்டபுரம், விக்ரமசீலம், காசி போன்ற விஸ்வ வித்யாலயங்களில் ரசாயன அறிவியல் கற்றுக் கொள்வதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்தார்கள்.
சிதையும் இயல்பில்லாத உலோகங்களில் பட்டியலை ‘ரச ரத்ன சமுச்சயம்’ என்று பண்டைய காலத்தில் குறிப்பிட்டார்கள்.
சுவர்ணம் ரஜதம் தாம்ரம் தீக்ஷ்ணம் வங்க புஜங்கமா: !
கம் ஷட்விதம் தச்ச யதா பூர்வம் ததக்ஷயம் !!
பொருள்: ஆறுவித சிதைவுறா குணமுள்ள உலோகங்கள் அவரோகண வரிசையில் இவ்வாறு உள்ளன… தங்கம், வெள்ளி, ராகி, தகரம், ஈயம், இரும்பு.
இதே கருத்தைத் தானே நவீன அறிவியலும் கூறுகிறது. இத்தகைய உயர்ந்த ஆய்வுத் திறன் உள்ள நம்மவர்கள் விஞ்ஞானிகள் இல்லையா?
ரசவாத சித்தர்களான விஞ்ஞானிகளின் நூல்களை ஆராய்ந்தால் அவை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை விட மிகப் பல்லாண்டுகள் முனனரே எழுதப்பட்டவை என்பது புரியும்.
- வாக்படர் (9ம் நூற்றாண்டு) – நூல் –ரசரத்ன சமுச்சயம்.
- நாகார்ஜுனர் (9ம் நூற்றாண்டு) – ரசரத்னாகரம்
- வ்ருந்தா (10ம் நூற்றாண்டு) – சித்தயோகம்
- கோவிந்த பாகவத் (11ம் நூற்றாண்டு) – ரசஹ்ருதயம்
- கோவிந்தாச்சார்யா (12ம் நூற்றாண்டு) – ரசார்ணவம்
- நித்யநாத சித்தர் (13ம் நூற்றாண்டு) – ரசரத்னாகரம்
- கோவிந்தாசார்யா (13ம் நூற்றாண்டு) – ரசசாரம்
- சோமதேவர் (12–13ம் நூற்றாண்டு) – ரசேந்திர சூடாமணி
- யசோதரா (13ம் நூற்றாண்டு) – ரசப் பிரகாச சுதாகரம்
- ராமசந்த்ரா (14ம் நூற்றாண்டு) – ராசேந்திர சிந்தாமணி
(சோர்ஸ்- ருஷிபீடம் நவம்பர் 2020)