
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
இந்துக்களை நம்ப கூடாது. அவ்வாறு நம்பிய தலைவர்களுக்கு அதிகாரமோ ஆதிக்கமோ இருக்காது என்பது அரசியல் கட்சிகளின் கொள்கை. அது உண்மைக்கு தூரமானது கூட இல்லை.
கட்சித் தலைவர்கள் ஹிந்துக்களே ஆனாலும் பதவி மோகத்திற்கு உள்ளாகும் அந்த தலைவர்கள் இந்துவல்லாத பிற மதத்தவரின் அடியை ஒற்றி நடந்து கொள்கிறார்கள்.
“தம் அரசாங்கம் பிற மதத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும். தம் கட்சி நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்காகவே பணிபுரியும்” என்று சற்றும் தயங்காமல் அறிவிப்பார்கள். ஆனாலும் ஹிந்துக்களுக்கு சுரணையே இருப்பதில்லை. மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் அனைத்தும் பிற மதத்தை திருப்திப்படுத்துவதற்காக தலைகீழாக நிற்கின்றன.
ஒரு தேசியக் கட்சி அந்த வழியையே சுதந்திரம் வந்ததிலிருந்து கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வரை அனுசரித்தது. அவர்கள் அனைவருக்கும் ஹிந்துக்களை பற்றிய முழுமையான அறிவும் புரிதலும் இருந்தது. கட்சியின் வெற்றிக்காக திட்டம் திட்டி அறிவுரை கூறுபவர்கள் இந்த விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்.
பிற மதத்தவருக்கு தேசப் பாதுகாப்பு, தேச முன்னேற்றம் பற்றிய அக்கறை இல்லை. தேசம் துண்டு துண்டாகப் பிரிந்து போனாலும் கவலையில்லை. ஆனால் தம்முடைய மதம் மட்டும் ஆதிக்கமும் அதிகாரமும் சாதிக்க வேண்டும். அவற்றுக்கு உதவும் கட்சிகளுக்கு, முழுமையாக தம் மதத்தவர் அனைவரும் ஓட்டு போடும்படிச் செய்வார்கள். தம் உதவி பெற்று பதவியை வென்ற கட்சிகளின் உதவியோடு ‘செக்யூலர்’ என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு தம் மத தேசங்களுக்கு இங்கிருந்து உதவி புரிவார்கள். தீவிரவாத மையங்களை நடத்துவார்கள்.
நம் தேசத்தில் இருந்துகொண்டு தம் மதத்தைச் சேர்ந்த தேசம் ‘ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்புவார்கள். நம் தேச எதிரிகளின் தேசியக் கொடிகளை நம் தேசத்தில் பறக்க விடுவார்கள். ஆனால் அவர்களுடைய ஓட்டுக்களால் வென்ற கட்சிகள் வாயை மூடி கொண்டிருக்கும். அதோடு கூட அவர்களின் உதவியோடு ஹிந்துக்களின் மீது தாக்குதல் செய்வதற்கும் பின்வாங்க மாட்டார்கள். மக்களும் கேள்வி கேட்க மாட்டார்கள். போலீசரும் அதில் தலையிட மாட்டார்கள்.
பிற மதத்தவரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இடங்களில் ஹிந்துக்கள் தம் வீடுகளில் கூட நலமாக வாழ முடியாது. தம் கோயில்களில் சுதந்திரமாக பூஜைகளும் உற்சவங்களோ செய்ய முடியாது. தலைவர்களின் உதவியோ போலீசாரின் பாதுகாப்போ கிடைக்காது.
மாஃபியா தலைவர்கள், லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்றோரில் யாராவது தண்டிக்கப்பட்டால் தேச நலனைக் கூட கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஊர்வலம் சென்று எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். இந்தப் பின்னணியில் பிற மதத்தவர்களில் ஒருவர் கூட நாட்டின் பாதுகாப்பு, நலம் குறித்து ஆலோசிக்க மாட்டார்கள். தம் மதத்தவர் தீவிரவாதி ஆனாலும் அவன் நல்லவனே. பயங்கரவாதியானாலும் அவன் உத்தமனே.
நேற்று முன்தினம் வரை இந்துக்களோடு நட்பாக இருந்த பிற மதத்தவர் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக திடீரென்று நட்பான ஹிந்துக்களை குடும்பத்தோடு அழிப்பதற்குக் கூட தயங்க மாட்டார்கள்.
பயங்கரவாதிகளை திருப்திப்படுத்தும் அரசியலின் பக்கமாகவே ஊடகம் கூட பேசும். தேசப் பாதுகாப்பு, தேச நலன், தேசத்தின் புனிதம், தேச முன்னேற்றம் இவற்றுக்காக ஊழலின்றி ஒவ்வொரு கணமும் ஓய்வில்லாமல் பாடுபடும் தேசபக்தி மிகுந்த தலைவர்களை பதவியிலிருந்து இறக்கும் முயற்சியில் தேசவிரோத சக்திகள் கை கோர்த்து சதித் திட்டத்தில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பார்கள். இதில் விந்தை என்னவென்றால், சாதி வெறியும் சுயநலமும் பழக்கமாகக் கொண்ட காட்சி ஊடகங்களும் பத்திரிக்கைகளும் கூட அவர்களுக்கே துணை நிற்கும்.
ஹிந்துக்களில் நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், உதாசீனர்கள் கூட இந்த சுயநல அரசியலின் பக்கமே இருப்பார்கள். மீதியுள்ள ஹிந்துக்களில் ஊழல்வாதிகளும் ஜாதிப் பைத்தியங்களும் ஹிந்துக்களின் சமூக நலன் பற்றி கண்டுகொள்ள மாட்டார்கள். தேசத்தின் எதிர்காலம், தேசத்தின் புனிதம் பற்றிச் சற்றும் சிந்திக்க மாட்டார்கள். ஓட்டு, அதிகாரம், அக்கிரம சொத்துக் குவிப்பு இந்த மூன்றே லட்சியமாக ஒவ்வொரு கணமும் உழைக்கும் தலைவர்களிடம் ஹிந்துமத எதிர்ப்பு, தீவிர வாத, பயங்கர வாதத்திற்கு துணை போவது, தேச முன்னேற்றத்தை விரும்பாத சுயநலம் இவை மட்டுமே தென்படுகிறது. ‘ஹிந்து தீவிரவாதம்’ என்ற ‘இல்லாத’ சொல்லை உருவாக்குவதற்கும் தயங்க மாட்டார்கள்.
ஹிந்துக்கள் என்றுமே ஒன்று சேர மாட்டார்கள். தம் மதம் மீது அவமானங்களும் தாக்குதல்களும் நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். கோவில்களைக் கொள்ளையடித்தாலும் நாசம் செய்தாலும் இவர்களுக்கு உடம்பில் எதுவுமே ஒட்டாது. மத மாற்றங்கள், கொலைகள் செய்தாலும் வாயைத் திறக்க மாட்டார்கள். ஹிந்து நலத்திற்காக முன்வரும் தலைவர்களுக்கு மெஜாரிட்டியில் தாம் இருந்தாலும் சரி, துணை புரிய மாட்டார்கள். குறைந்த அளவு அனைவரும் ஓட்டுச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கக் கூட மாட்டார்கள். தேசம் எப்படிப் போனாலும் இவர்களுக்கு கவலை இல்லை. ‘எந்த மதமானால் என்ன?’ என்ற போக்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே உள்ளது.
‘நானும் நீயும் பாய் பாய்’ என்று அவர்களோடு ஒட்டிக்கொண்டு பூசிக் கொண்டு அடுத்தவனுடைய வேஷதத்தைத் தானும் போட்டுக்கொண்டு அலைபவன் ஹிந்து மட்டுமே. பிற மதத்தவருக்கு இந்த கருத்துக்களுடன் ஒப்புதல் இல்லை.
தம்முடைய ஓட்டால் மட்டுமே அந்த கட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆதலால் தாம் கூறுவதுபடியே கேட்க வேண்டும். தம் மதத்திற்கு முன்னுரிமையும் அதிகாரமும் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொண்டு வருவதையும் நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அதே போல தாம் செய்யும் இம்சைகளுக்கும் மதமாற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்த தடையும் இருக்கக் கூடாது என்றும் மேலும் அவற்றிலிருந்து தர்மத்தையும் தேசத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று ஏதாவது முயற்சி செய்தால் இங்கு மைனாரிட்டிகளுக்கு சுதந்திரம் இல்லை என்ற தீய பிரச்சாரம் செய்து வெளிநாட்டு அரசாங்கத்தின் மூலமாகவும் பத்திரிகைகளின் மூலமாகவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவார்கள்.
எந்தத் துறையில் இருந்தாலும் ஹிந்துவல்லாத பிற மதத்தவர்கள் அனைவரும் தம் மதமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தை போதிக்கும் மதப் பெரியவர்களின் சொற்களைக் கடைப்பிடிப்பார்கள். வெளிப்படையாகவே மத வெறியர்களுக்குத் துணை நிற்பார்கள். பகை தேசங்களின் பிரதிநிதிகளாக நடந்து கொள்வார்கள்.
சுருக்கமாக…
ஒவ்வொரு ஹிந்துவல்லாத பிற மதத்தவரும் மத வெறியாளன் அல்ல. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் பிற மதத்தவரே. தேவைப்படும் சூழலில் பிற மதத்தவரே தீவிரவாதிகளுக்கு உதவியாக நிற்கிறார்கள்.
அதே போல், ஒவ்வொரு ஹிந்துவும் தேசபக்தர் அல்ல. ஆனால் தேச பக்தர்கள் அனைவரும் பெரும்பான்மையாக ஹிந்துக்களே.
ஹிந்துவல்லாத பிற மதத்தவர்களின் ஆதிக்கம் உள்ள இடங்களில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இதயம் படபடக்க ஹிந்துக் குடும்பங்கள் வாழ்வதை தேசம் முழுவதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
அனைத்து மதங்களோடும் கலந்து வாழ்வதற்கு எப்போதும் தயாராக இருக்கும் இந்து மதத்திற்கு முழுமையான வெற்றி கிடைத்தால் தேசத்தில் அனைவரும் நலமாக இருப்பார்கள். தேசம் புனிதமாக, விசாலமாக, அனுதின முன்னேற்றத்தோடு நலமாக விளங்க வேண்டும் என்றால் அந்த லட்சியங்களை விரும்பும் அனைவரும் அரசியலோடு நிமித்தமில்லாமல் தேசம், தர்மம் என்ற திசையாக நிலைத்து நிற்கும் தலைமைக்கு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். தேசத்தின் மீது அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவோம்.
(தலையங்கம், ருஷிபீடம் – தெலுங்கு மாத இதழ், ஜூன் 2023)