சகாப்தம்- உருவாக்கும் தருணம்
— சிவ சூரிய நாராயணன் —
புதிதாக அமல்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டத்திற்கு முன்புள்ள குற்றவியல் சட்டத்தை அன்றைய காங்கிரஸ் அரசால் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யத் திட்டமிடப்பட்டது.
இருப்பினும், இந்த மாற்றத்தைச் செயல்படுத்தும் தொலைநோக்கு அல்லது திறன் காங்கிரஸ் அரசுக்கு இல்லை. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தற்போதைய NDA அரசாங்கத்தின் தலைமையில் இந்த வரலாற்று தருணம் இறுதியாக நிறைவேறியுள்ளது.
சட்டச் சீர்திருத்தங்கள் பாரதத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் செயலாகும். 2024 ஆண்டு வரை, பாரதத்தில் மொத்தம் 1486 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நமது பாரதம் சுதந்திரம் அடைந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது குற்றவியல் நீதி அமைப்பு இம்மூன்று சட்டத்தினால் மெருகேறியுள்ளது.
அவை:
i) பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-2023
ii) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) -2023
ii) பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA)-2023
இந்திய தண்டனைச் சட்டம் (IPC-1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC-1973), இந்திய சாட்சியங்கள் சட்டம் (IEA 1872) ஆகிய பழைய 3 சட்டங்களை ரத்து செய்வதன் மூலம், இத்தகைய புதிய சட்டங்கள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு காலனித்துவ முத்திரையை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன.
BNSS 2023 இன் முக்கிய அம்சங்கள்:
- பிரிவு 43(3), இன் கீழ் காவல்துறை அதிகாரி, குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒருவரைக் கைது செய்யும் போது அல்லது நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தும் போது கைவிலங்கைப் பயன்படுத்தலாமே, தவிர குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக கைவிலங்குகளைப் பயன்படுத்துவதைத் இச்சட்டம் தடுக்கிறது.
- பிரிவு 63(ii) படி மின்னணு முறையில் குற்றம் சாட்டப் பட்டுள்ள நபர்களுக்கு சம்மன் அனுப்ப இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதனால். நீதிமன்றம், காவல்துறை மற்றும் வழக்குரைஞர்களின் நேர விரையம் தடுக்கப் படுகிறது.
- பிரிவு 173 (1) இன் படி, அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் எந்த ஒரு நபரும் எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ எஃப்.ஐ.ஆர் (Zero FIR) பதிவு செய்ய இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.
- பிரிவு 173 (1)(ii) இன் கீழ், மின்னணு சாதனம் மூலம் சம்பவத்தைப் புகாரளிக்க மக்களை அனுமதிக்கிறது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு உடல் ரீதியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.
- பிரிவு 36-ன் கீழ், கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்படுபவர் தான் விரும்பும் ஒரு நபருக்கு தனது கைதுப் பற்றிய தகவலை அளிக்கலாம்.
- BNSS இன் பிரிவு 173(3)(i)என்பது பூர்வாங்க விசாரணையின் கருத்தைக் கையாளும் ஒரு புதிய விதியாகும். மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை மற்றும் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையைப் பற்றிய தகவல் ஒரு காவல் நிலையத்திற்கு 14 நாட்களுக்குள் கிடைக்கப்பெற்றால், பொறுப்பான அதிகாரி, துணை காவல் கண்காணிப்பாளரின் அனுமதியுடன் ஆரம்ப விசாரணையை நடத்தலாம். 14 நாட்களுக்குள் நிரபராதி என்று நிரூபித்தால் வழக்கை தவிர்க்கலாம். இது நிரபராதிகளுக்கு எதிராக தேவையற்ற வழக்கை தடுக்கிறது.
- பிரிவு 174 (1)(i) இன் கீழ், விசாரணை அதிகாரியை அனைத்து பிடியாணை பெறத்தகு குற்ற (Non cognizable offence) வழக்குகளின் தினசரி நாட்குறிப்பு அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பும்படி கட்டாயப்படுத்துகிறது. இது சரியான திசையில் தான் விசாரணை நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும் மற்றும் மேற்பார்வை செய்யவும் மெஜிஸ்ட்ரேட்டுகள் அதிகாரம் வழங்கியுள்ளது.
- பிரிவு 175(1) உடன் இணைக்கப்பட்ட நிபந்தனை விதியின் கீழ், குற்றத்தின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு காவல் கண்காணிப்பாளர் தனது துணை காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கை விசாரிக்க அதிகாரத்தை வழங்குகிறது. மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் தனது பொறுப்பை உணர்ந்து பாரபட்சமற்ற முறையில் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் இவ்விதி கூறுகிறது.
- பிரிவு 175(3) கீழ் மாஜிஸ்திரேட் முன் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், பிரமாணப் பத்திரம் மூலம் ஆதிரிக்கப்படவேண்டும் என பிரிவு 173 (4) கூறுகிறது. பிரிவு 210ன் கீழ் அதிகாரம் பெற்ற எந்தவொரு மாஜிஸ்திரேட்டும், அவ்வாறு ஆதிரிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலித்து, அவர் தேவை என்று கருதும் விசாரணை செய்து, காவல்துறை அதிகாரியால் இது தொடர்பாக சமர்ப்பித்த பிறகு, உத்தரவிடலாம். இதன் மூலம் மாஜிஸ்திரேட் முன் தேவையற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டு விண்ணப்பம் தவிர்க்கப்படுகிறது. இந்த நடைமுறை மாஜிஸ்திரேட் விழிப்புடன் இருக்க உதவுகிறது.
- பிரிவு 175(4) இன் கீழ், ஒரு அரசு ஊழியர் அவரது பணியின் போது எழும் தேவையற்ற குற்றச்சாட்டு வழக்குகளிருந்து அவரை இது பாதுகாக்கிறது. மேலும் இக்குற்றச்சாட்டினை மெஜிஸ்ட்ரேட் விசாரணை செய்ய முன் மொழியாமலும் இருக்கலாம்.
- பிரிவு 175[4][a] இன் கீழ் சம்பவத்தின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் அடங்கிய அறிக்கையை குற்றம் சட்டப் பெற்ற அரசு ஊழியரை விட உயரிய அதிகாரியிடமிருந்து அறிக்கையைப் மாஜிஸ்திரேட் பெறுதல்; மற்றும்
(b) அவ்வாறு கூறப்பட்ட சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து அரசு ஊழியர் கூறிய கூற்றுகளை பரிசீலித்த பிறகு, விசாரணைக்கு உத்தரவுயிடுதல்.
இந்த பிரிவு அரசு ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குகிறது அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் தேவையற்ற வழக்கு.
இந்த பிரிவு அரசு ஊழியர்களின் தங்கள் கடமை செய்யும் போது அவர்கள்மீது எழுப்படும் தேவையற்ற குற்றசாட்டிலிருந்து பாதுகாக்க வழி வகை செய்கிறது - பிரிவு 176(3) இன் கீழ், ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனைக்குரிய குற்றத்தில் அறிவியல் பூர்வமான விசாரணையை வழங்குகிறது, மேலும் குற்றம் பற்றிய தகவலைப் பெற்றவுடன், காவல் நிலையத்தின் பொறுப்பாளர், தடயவியல் நிபுணர் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பதையும், அந்தக் காட்சி விடியோவாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மொபைல் போன்கள் அல்லது மின்னணு சாதனங்களைப் மூலம் பதிவு செய்யலாம். இப்பிரிவு உண்மையான அல்லது நிரூபணமான ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் விசாரணை துல்லியமான முறையில் நடப்பதையும் தவறான ஆதாரங்களை தவிர்ப்பதையும் காட்டுகிறது.
- பிரிவு 179[1] இரண்டாவது விதியின் உட்பிரிவு முதல் உட்பிரிவிலுள்ள நபர்கள் காவல் நிலையத்தில் ஆஜராக தயாராக இருப்பவர்களை அனுமதி யளிக்கிறது. இந்த பிரிவு காவல்துறைக்கு தேவையற்ற அலைச்சலையும் செலவுகளையும் தவிர்க்கிறது
- பிரிவு 183[6]a கீழ் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை மகளிர் மாஜிஸ்திரேட்டால் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.ஏனெனில் இது பாதிக்கப்பட்டவரின் சங்கடமான சூழ்நிலையை தவிர்க்கிறது..
- பிரிவு 183(6)(அ)(ii) கீழ், காவல்துறையினரால் நிரூபிக்கப்பட்ட சாட்சி மற்றும் அவரது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும் என்பதை இவ்விதி கட்டாயமாக்குகிறது மற்ற சாட்சிகளை பதிவு செய்யக்கூடாது.
இதனால் தவறான வாதத்தை தவிர்த்து அந்நியர் வழக்கை திசை திருப்பாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குகிறது. - பிரிவு 185(2) உடன் இணைக்கப்பட்ட உட்பிரிவின் கீழ், நடத்தப்படும் விசாரணை ஒரு விசாரணை அதிகாரியால் ஆடியோ-விடியோ மின்னணு வழிமுறைகள் குறிப்பாக செல்போன் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்,ஏனெனில் குற்றவாளிக்கு முறையான நீதியை வழங்குவதற்கான வழி இதுவாகும். இந்த பிரிவு குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குடை.
- 187(2) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் யாரிடம் ஒப்படைக்கப்படுகிறாரோ. அந்த மாஜிஸ்திரேட், அந்த வழக்கை விசாரிக்க அவருக்கு அதிகார வரம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவ்வப்போது, குற்றம் சாட்டப்பட்டவரை முதல் 40 நாட்கள் அல்லது 60 நாட்கள் பொருத்தமான காவலில் வைக்க அதிகாரம் அளிக்கிறது. மேலும் இப்பிரிவு நீதி மன்ற காவலில் இருந்து போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்வது பற்றியும் குறிப்பிடுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவும் வழி வகை செய்கிறது.
- பிரிவு 187 இன் துணை உட்பிரிவு (5) உடன் இணைக்கப்பட்ட இரண்டாம் நிபந்தனை விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்டவிரோத காவலில் இருந்து அவரை துன்புறுத்துவதையும் சித்திரவதை செய்வதையும் தவிர்க்கிறது, மேலும் இந்த விதி குற்றம் சாட்டப்பட்டவர்களை அங்கீகரிக்கப்படாத காவலில் வைப்பதிலிருந்து பாதுகாக்கிறது.
- பிரிவு 190, நிபந்தனை விதி, தேவையற்ற காவலைத் தவிர்க்க வழி வகை செய்கிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் இயல்பு எதுவாக இருந்தாலும் மாஜிஸ்திரேட் உத்தரவின் பெயரில் அவர் பாதுகாப்பு பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்.
- 193(2) 8, P.O.C.S.O Act-2012 4,6,8 & 10 2 வரும் பெண்கள் மற்றும் குழந்தைக்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவருக்கு விரைவான நீதியை தரும்பொருட்டு, விசாரணையை விரைவாக செய்ய கட்டாயமாக்குகிறது.
BSA 2023 இன் முக்கிய அம்சங்கள்
இந்திய சான்றுகள் சட்டம்-1872 இல் காலாவதியான பிரிவுகள் அதாவது, 22(A), 82, 88, 113 & 166 இதில் நீக்கப்பட்டன.
இந்திய சாட்சியச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மற்றும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
Indian Evidence Act-1872 -> Bharatiya Sakshya Adhiniyam- 2023
Sections 24,28&29 -> Section 22
Sections 25,26&27 -> Sections 23
Section 45(A) -> Section 39(2)
Section 63(i-iv) -> Sections 58(i-vii)
Section 120 -> Section 126 with new marginal note
Section 127 -> Section 132(3)
Section 141, 142, 143 -> Section 146
BSA 2023 இன் பிரிவு 61, மின்னணு பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பிரிவு 63 ல் உள்ள, சில நிபந்தனைக்குட்பட்டு, எந்த தடையும் இல்லாமல் மின்னணு பதிவுகள் சாட்சியாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
இந்தப் புதிய சட்டங்கள் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அதாவது 158 சந்திப்புக் கூட்டங்கள், 1000 பரிந்துரைகள் ஏற்று செயல்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுரையாளர்: மூத்த வழக்குரைஞர், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர், திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர்.