சூர்யா அவர்கள் கூறியதையே தான் கூறுகிறோம் ஏழை நடுத்தர மக்களுக்கு கல்வி தான் வாழ்க்கையில் உயர வாய்ப்பு அளிக்கும் அதனை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளை விட்டு விடுங்கள். இந்தியாவிலேயே மிக அதிகமாக சம்பளம் மற்றும் சலுகைகள் பெற்றுக் கொண்டு யூனியன் வைத்துக் கொண்டு தங்களது பணிகளை சரிவர செய்யாமல் சொந்த தொழில்கள் பிரைவேட் டியூசன் வட்டிக்கு விட்டு பணம் வாங்குவது போன்ற பல வற்றில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பெரும் பாலும் பிசியாக உள்ளார்கள்.
அதனால் அவர்களே அவர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது இல்லை. நல்ல சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் டாக்டர்கள் மற்றும் வக்கீல் வீட்டு பிள்ளைகள் பணக்காரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வீட்டு பிள்ளைகள் பணம் கொடூத்து தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்ந்து ஹிந்தி கற்றுக் கொள்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள்.
அதே சமயம் நவோதயா பள்ளிகள் கிராமபுற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை நடுத்தர மக்கள் வீட்டு பிள்ளைகள் பயனடைய பல கோடிகள் செலவில் மாணவர்களுக்கு உயர் தர கல்வி அளிக்கிறார்கள்.
பணம் செலவு இல்லாமல் கற்றுக் கொள்ள முடியும். அந்த மாணவர்கள் நீட் எளிதில் புரிந்து தைரியமாக எதிர் கொண்டு தேர்ச்சி பெறுகிறார்கள். பல லட்சம் கொடுத்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதற்கு சமமான தரமான கல்வி அளிக்க முடியாது.
எனவே கேரளாவில் கல்வி மாவட்டத்தினை இரண்டாக பிரித்து காண்பித்து மேலும் நவோதயா பள்ளிகள் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்கிறார்கள்.
ஒரு மாவட்டத்திற்கு ஒன்று தான் நவோதயா பள்ளிகள் கிடைக்கும். ஒவ்வொரு பள்ளியும் பல கோடிகள் செலவில் அனைத்து வசதிகளுடன் அமைக்க படுகிறது. உண்டு உறைவிடப் பள்ளி. இதனை நடிகர் சூர்யா வீடியோ வில் பார்க்க வேண்டும். இந்த பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.
எனவே நீங்கள் சொன்ன ஏழைநடுத்தர வீட்டு பிள்ளைகள் நல்ல கல்வி பெற உங்களை போன்று பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சமமான கல்வி பயில நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்
மேலும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நீங்கள் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்த்து ஹிந்தி கற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் ஏழை நடுத்தர வீட்டில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஹிந்தி கற்றுக் கொள்ள விரும்பினால் அரசு பள்ளிகளில் அதற்கு வாத்தியார் நியமணம் செய்து சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று தாங்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஏழை நடுத்தர வீட்டு பிள்ளைகள் தங்கள் மனைவி போல ஹிந்தி பேசமுடியும்.
டாக்டர்.கனிமொழி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தயாநிதி மாறன் மாதிரி ஹிந்தி பேசமுடியும். அவர்கள் விரும்பி தான் கற்றுக் கொண்டார்கள். யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
எனவே தாங்கள் மூன்றாவது மொழியாக ஹிந்தி பிரெஞ்சு சைனீஸ் ஜெர்மன் உட்பட ஏதாவது ஒரு மொழியை இந்த கால மாணவர் தலைமுறை கற்றுக் கொள்ள ஆதரவு தெரிவித்து இலவச விளம்பரம் பேசவேண்டும்.
செய்வீர்களா?
அதே போல கோடிகள் செலவு செய்யாமல் ஏழைநடுத்தர மக்கள் வீட்டு பிள்ளைகள் டாக்டர் படிப்பு படிக்க நீட் அவசியம் என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்
- ராமஸ்வாமி வேங்கட்ராமன் (Ramasamy Venkatraman)




