கேள்வி:- ரேவா நதீ தீரத்தில் மந்திர ஜபம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்களே!. அந்த நதி எங்குள்ளது கூறுவீர்களா? அங்கு தங்குவதற்கு வசதி சௌகர்யங்கள் உள்ளதா?
பதில்:- ‘ரேவா நதி’ என்பது நர்மதா நதியின் மற்றொரு பெயர். இந்த நதியின் அதிக பாகம் மத்திய பிரதேசத்தில் ஓடுகிறது. இதன் தீரத்தில் பல புண்ணிய க்ஷேத்திரங்கள் உள்ளன. ‘ஓம்கார மமலேஸ்வரம்” என்ற புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத் தலம் நர்மதா நதிக் கரையில் உள்ளது. இந்த தலத்தில் வசதி சௌகர்யங்களும் உள்ளன. நதியின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் கொண்ட இந்த தலம் மிகவும் மகிமை வாய்ந்தது.
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)