
தானிய அடை
தேவையானவை:
காராமணி – ஒரு கப்,
பச்சைப் பயறு – ஒரு கப்,
கொண்டைக்கடலை – ஒரு கப்,
சிவப்பரிசி – ஒரு கப்,
சோள ரவை (மளிகைக் கடையில் கிடைக்கும்) – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
இஞ்சி – சிறிய துண்டு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
வெள்ளை வெங்காயம் – ஒன்று,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
எல்லா தானியங்களையும் முதல் நாளே காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் அரைப்பதற்கு முன் சோள ரவையை கால் மணிநேரம் ஊற வைத்து சேர்த்து அரைக்கவும்.
இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, சிறிது நேரம் மூடி வைத்து, சுட்டடெடுக்கவும். ஒரு அடைக்கு கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டால் போதும்.



