
முருங்கைக்கீரை சூப்
தேவையானவை:
ஆய்ந்து, சுத்தம் செய்த முருங்கைக்கீரை – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 2,
தக்காளி – ஒன்று,
பூண்டு – ஒரு பல்,
மிளகு – கால் டீஸ்பூன்,
தனியா, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், தக்காளியை நறுக்கவும். மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும். கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு – சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வந்தால், முருங்கைக்கீரை நிவாரணம் அளிக்கும்.