
மாங்காய் பருப்பு ரசம்
தேவையானவை:
மாங்காய் – 2
துவரம்பருப்பு – கால் கப்
பச்சை மிளகாய் – 6
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பொடித்த வெல்லம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு :
கடுகு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
நெய் – ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
செய்முறை :

துவரம்பருப்பை வேகவைத்துக் குழைத்துக்கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். மாங்காயைத் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும். மிளகு, பூண்டு, சீரகத்தை மிக்ஸியில் நுணுக்கிக்கொள்ளவும். மாங்காய், பச்சை மிளகாயை குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த மாங்காய், பருப்புத் தண்ணீர் சேர்த்து வைக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் மிளகுக் கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு மாங்காய் – பருப்புக் கலவையை சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து, நுரை கூடியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பாத்திரத்தில் உப்பு, வெல்லம் சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும். அருமையான மாங்காய் ரசம் தயார்.