
(கருணைக்கிழங்கு எண்ணெய் கறி) கந்த வேப்புடு
தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு – 1/2 கிலோ,
மிளகாய் தூள், தனியா தூள் – இரண்டும் சேர்த்து 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:

கருணைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கவும். நறுக்கிய கிழங்கை தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடலை மாவு சேர்த்துப் பிசறி குக்கரில் சிறிது தண்ணீர் தெளித்து 1 விசில் வரும் வரை வேக விடவும். வெந்ததும் எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும். –



