நேந்திரங்காய் கஞ்சி
தேவையானவை:
நேந்திரங்காய் – ஒன்று,
பால் – அரை கப்,
சர்க்கரை – 4 டீஸ்பூன்.
செய்முறை:
நேந்திரங்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். தேவையானபோது சிறிதளவு காய்ந்த துண்டுகளை மிக்ஸியில் பொடிக்கவும்.
இதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.