வெஜ் தீயல்
தேவையானவை:
முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி – தலா ஒன்று, தேங்காய் (துருவிக் கொள்ளவும்), – ஒரு மூடி
தனியா – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – சிறிதளவு,
கடுகு, எண்ணெய் – தாளிக்க தே. அளவு, மிளகு – 4,
புளி (கரைத்துக் கொள்ளவும்), – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – சிறிதளவு,
மிளகாய் வற்றல் – 4,
உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை – தேவையான அளவு.
செய்முறை:
முருங்கை, கத்திரியை சுத்தம் செய்து துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாய் வற்றல், தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய காய்கள், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், புளிக் கரைசல், வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.