எரிசேரி
தேவையானவை:
வாழைக்காய் – ஒன்று,
சேனைக் கிழங்கு – 100 கிராம்,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – ஒரு மூடி,
அரிசி – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள், கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சேனைக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக்கி வேகவிடவும். இதனுடன், தோல் சீவி, நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு கொதிவிட்டு… உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் மிளகு, அரிசி சேர்த்து அரைத்து, காயுடன் கலந்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால்… எரிசேரி தயார்!