மல்டி நட்ஸ் வடை
தேவையானவை:
கடலை மாவு – 50 கிராம்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்),
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),
சீரகம் – அரை டீஸ்பூன்,
வறுத்து உடைத்த முந்திரி, வேர்க்கடலை, பாதாம் – சிறிதளவு (வறுக்கவும்),
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், முந்திரி, வேர்க்கடலை, பாதாம், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து நீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய வடைகளாகத் தட்டிப்போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்