வீட்டிலேயே சத்துமா செய்யும் முறை!

sathuma 1 - 2026

கடையில் சத்துமா வாங்குவதை விட அதனை வீட்டிலே மிக எளிமையாக செய்து உபயோகிக்கலாம் இதனால் சிறந்த ஆரோக்கியமும் சுத்தமும் கிடைக்கும் கலப்படமில்லாத பொருளாகவும் இருக்கும் இதை 6 மாதம் வரை உபயோகிக்கலாம்
சத்துமாவு . தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!
sathuma kantchi - 2026

செய்முறை:

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும்.

அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்.

12 கிலோ மாவு கிடைக்கும். சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்:
1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.
2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். 3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.
5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். 8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு: 1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. 2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories