ஈறுகளில் ரத்தம் கசிந்தது சீழ் பிடிக்கிறதா? வீட்டு வைத்தியம்!

Gum
Gum

பயோரியா பிரச்சனைக்கான அறிகுறிகளாவன பற்களைத் துலக்கும் போது இரத்தக்கசிவு, ஈறுகளில் புண், சாப்பிடும் போது பல் வலி, வாய் துர்நாற்றம் மற்றும் வீக்கம், ஈறுகள் சிவந்து காணப்படுவது போன்றவைகளாகும். இம்மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம், மோசமான வாய் சுகாதாரம்.

ஒருவரது வாயின் ஆரோக்கியம் உணவுப் பழக்கங்களைப் பொறுத்தது. எப்போது அதிகளவிலான சர்க்கரை அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்கிறோமோ, அப்போது வாயில் கிருமிகளின் அளவு அதிகரிக்கும். இதனால் பயோரியா பிரச்சனை ஏற்படும். மேலும் இந்த பிரச்சனையானது ஒருவரது உடலில் சில வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களின் குறைபாட்டினாலும் ஏற்படலாம்.

படிகாரம் மற்றும் மாதுளை பட்டை
500 கிராம் உலர்ந்த மாதுளை பட்டை, 10 கிராம் படிகாரம், எப்சம் உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பொடியால் தினமும் 2 முறை பற்களைத் துலக்க வேண்டும். இதனால் எப்பேற்பட்ட ஈறு பிரச்சனைகளும் விரைவில் குணமாகும்.

விளக்கெண்ணெய், கற்பூரம் மற்றும் தேன்
200 மிலி விளக்கெண்ணெய், 100 மிலி தேன் மற்றும் 5 கிராம் கற்பூரம் ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்து, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் வேப்பங்குச்சியை எடுத்து, இந்த பேஸ்ட்டைத் தொட்டு, பின்பு எப்போதும் போன்று பற்களிலும், ஈறுகளிலும் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கேரட் மற்றும் பசலைக்கீரை
கேரட் மற்றும் பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பயோரியா பிரச்சனை இருந்தால், இந்த இரண்டையும் கொண்டு சூப் தயாரித்து தினமும் குடியுங்கள். இல்லாவிட்டால், கேரட் ஜூஸ் மற்றும் பசலைக்கீரை ஜூஸை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் குடித்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

கொய்யா
கொய்யாவில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது மற்றும் இது பற்களுக்கு மிகவும் நல்லது. நன்கு கனியாத கொய்யாவை உப்பு தொட்டு வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் பயோரியா குணமாகும். அதேப் போல் பழுத்த கொய்யா இலையை வாயில் போட்டு மெல்லுவதாலும், நன்மை கிட்டும். இது ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாக்கும்.

எலுமிச்சை சாறு பயோரியாவை சரிசெய்யும். அதற்கு எலுமிச்சை சாற்றினை ஈறுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இது சற்று எரிச்சலைத் தரலாம். எலுமிச்சை சாற்றினைக் கொண்டு தொடர்ச்சியாக மசாஜ் செய்து வந்தால், விரைவில் இரத்தக்கசிவு நின்றுவிடும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தாலும், பயோரியா சரியாகும். பற்களைத் துலக்கிய பின், கடுகு எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, ஈறுகளை மசாஜ் செய்யுங்கள். ஒருவேளை உங்களது ஈறுகளல் வலி கடுமையாக இருந்தால், பஞ்சுருண்டையில் இந்த கலவையை நனைத்து, ஈறுகளில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

ஆரஞ்சு மற்றும் வாழைப்பழத் தோல்
ஆரஞ்சு தோல் பயோரியா பிரச்சனையை குணமாக்கும். ஆரஞ்சு தோலைக் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்யுஙக்ள். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி பற்களுக்கு கிடைத்து, இரத்தக்கசிவு நிறுத்தப்படும். அதேப் போல் வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்வதன் மூலமும், ஈறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வெங்காயம்
வெங்காயத் துண்டு ஒன்றை எடுத்து, வாயினுள் பற்களுக்கு அடியில் வையுங்கள். சில நிமிடங்கள் வாயில் எச்சில் சேரும் வரை அப்படியே இருங்கள். இதனால் ஈறுகளில் உள்ள அழற்சி குறைந்து, பயோரியா பிரச்சனை சரியாகும்.

நல்லெண்ணெய்
பயோரியாவை சரிசெய்ய நினைத்தால், காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் வைத்திருங்கள். முக்கியமாக இந்த 10 நிமிடமும் அவ்வப்போது வாயைக் கொப்பளிக்க வேண்டும். பின் எண்ணெயை துப்புங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், ஈறுகள் ஆரோக்கியமடைந்து, இரத்தக்கசிவு ஏற்படுவதும் தடுக்கப்படும் ‌

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories