December 5, 2025, 11:52 PM
26.6 C
Chennai

ஹெட்போனும் காதுமாய் இருக்கிறீர்களா? எச்சரிக்கை!

headphone 1
headphone 1

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது சகஜமாகி விட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் இசை மயம்தான். சிலர் அலுவலகங்களில் பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்கிறார்கள். வீட்டில் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்கவும், ஹெட்போன்களை பயன்படுத்துவோர் ஏராளம்.

இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது,

தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர்.

நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும்.

இப்போதிருக்கும் அனைத்து ஹெட்போன்களுமே உங்கள் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் காது சவ்வுகளுக்கு மிகவும் நெருக்கமானது. இது உங்களுக்கு மிகச்சிறந்த பாடல் கேட்கும் அனுபவத்தை கொடுக்கலாம். ஆனல் இதனை நீண்ட நேரம் உபயோகிக்கும் போது உங்கள் காதுகளுக்கு செல்ல வேண்டிய காற்றை நீங்கள் தடுக்கிறீர்கள். இதனால் பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

headphone
headphone

தொற்று நோய்கள்
ஹெட்போன்களை உபயோகிக்கும் முன் நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டிய மற்றொன்று உங்கள் ஹெட்போனை எப்பொழுதும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது. ஹெட்போன்களை பகிர்ந்துகொள்வது தேவையில்லாத பல நோய்களை உண்டாக்கும். ஒருவேளை அப்படி பகிர்ந்துகொள்ள நேர்ந்தால் மீண்டும் உபயோகிக்கும் முன் நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

காது வலி நீண்ட நேரம் ஹெட்போன் உபயோகிப்பதோ அல்லது அதிக ஒலியில் பாடல்கள் கேட்பதோ உங்கள் காதுகளில் கடுமையான வலியை உண்டாக்கும். காதுகளில் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள உறுப்புகளுக்கும் இந்த வலி பரவும்

காது உணர்வின்மை நீண்ட நேரம் ஹெட்போன் உபயோகிப்பது உங்கள் காதுகளில் உணர்வின்மையை ஏற்படுத்தலாம். உணர்வின்மை மட்டுமின்றி இதனால் தற்காலிக கேட்கும் திறன் இழப்பு கூட ஏற்படலாம். இந்த எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து இதனை செய்தால் நிரந்தர கேட்கும்திறன் இழப்பு கூட ஏற்படலாம்.

பயணத்தின் போது ஹெட்போன்கள் உபயோகிப்பது உங்களுக்கு பயணத்தை எளிதாக்க இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மற்ற நேரங்களை காட்டிலும் பயணத்தின் போது ஹெட்போன் உபயோகிப்பது இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். சத்தம் நிறைந்த பஸ்ஸிலோ அல்லது இரயிலோ ஹெட்போன் உபயோகிப்பது உங்கள் காதுக்கு எட்டும் ஒலியின் டெசிபலின் அளவை அதிகரிக்கும். இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

புற்றுநோய் ஹெட்போன்கள் மூளையின் மீது கதிர்வீச்சு ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். இதனால் புற்றுநோய் அல்லது மூளைக்கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மூளையின் மீது கதிர்வீச்சுகள் அதிகரிக்கும்போது அது இயற்கையாகவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

headphone 2
headphone 2

பெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும், அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறுகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை அதிக நேரம் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றன..அதே போல வேகமாக பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன…

தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்ற மனநோய் வரும். இதனால் அவர்களுக்கு ஹெட்போனை கழற்றிய பிறகும் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும் இருக்கும்.

உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

headphone 3
headphone 3

ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால் ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள்

மிகச்சிறிய ஹெட்போன்களை, அதாவது நேரடியாக காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிரிக்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.

முடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பொஞ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பொஞ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories