September 28, 2021, 1:37 pm
More

  ARTICLE - SECTIONS

  (கண்பார்வை)நேத்ரம் சிறக்க நேத்ர பூண்டு!

  nethra pundu - 1

  நேத்திரப் பூண்டு நான்கு நான்கு இலைகளாக இருக்கும். மழை வளம், தண்ணீர் வளத்தை பொருத்து இது உயரமாக வளரும்.

  சென்னைக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்தில் தேற்றான் மரங்களுக்கு நடுவில் பெரிய பெரிய இலைகளைக் கொண்டு வளர்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை ‘அற்றலை பொருத்தி’ என்று பேச்சு வழக்கில் கூறுகின்றனர்.
  இதன் தண்டை ஒடித்து விட்டு மீண்டும் பொருத்தினீர்கள் என்றால் பொருந்திக் கொள்ளும். அதனால் இந்தப் பெயர் வந்துள்ளது.

  இதிலுள்ள பசைச் சத்தே இதற்கு காரணம். ஆனால் உண்மையான பெயர் ‘அருந்தலை பொருத்தி’. இதன் பெயரிலேயே இதன் பயன் உள்ளது.
  நேத்திரப்பூண்டு

  தாவரப்பெயர் : BLEPHARIS MADERASPATENSIS
  4.தாவரக்குடும்பப் பெயர் : ACANTHACEAE
  5.வகைகள். :இல்லை.

  1. பயன்தரும் பாகங்கள் : பூ மற்றும் இலை.
   டான்சில்,கண் பார்வை,குடல் புண், உடல்
   உள்ரணங்கள் ஆகியன குணமாகும்

  நேத்திரம்= கண். நேத்திரப் பூண்டு தைலம் கண் நோய்களுக்கு மட்டுமல்ல வயிற்றுப்புண்,ஒற்றைத் தலைவலி,செரிமானக்கோளாறு, கிராணி போன்ற நோய்களுக்கு வழங்கலாம்.

  தைலம் செய்முறை…
  நல்லெண்ணெய்…1 லிட்டர்
  நேத்திரப்பூண்டு… அரை கிலோ
  தும்பை… 100 கிராம்
  கரிசாலை… 100 கிராம்
  பொன்னாங்காணி… 100 கிராம்
  கற்றாழை… 100 கிராம்
  மேலே கூறிய மூலிகைகளிலிருந்து சாறெடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி மணல் பதம் வந்தவுடன் இறக்கி மேற்கூறிய நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

  நேத்திர பூண்டு மூலிகையின் வேறு பெயர்கள்

  நேத்ர பூண்டு, சோம நேத்ர புஷ்ப குழி, நேத்ர மூலி, நேத்திரஞ்சிமிட்டி மற்றும் ஒட்டி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

  சிறியோர் முதல் பெரியோர் வரை , அனைவரும் பாதிக்கப்படும், கண் நோய் பிரச்னைகள் பலப்பல!, கண் மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, கண் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல், கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள், போன்ற நோய்கள் ஏராளம்.

   இத்தகைய குறைபாடுகளைக் களைய , அன்றே , நம் ஆதி சித்தர்கள் ஏடுகளில் எழுதி வைத்திருக்கும் அரிய சித்த வைத்திய முறைதான், அனைத்து கண் நோய்களுக்கும் மூலிகைகள் மூலம் சிறந்த தீர்வு காணும், நேத்திரப்பூண்டு கண் தைலம்.
  
    மிகவும் அரிதான ஒரு மூலிகை வகை தான், நேத்திரப்பூண்டு. இந்த மூலிகையை , சாப நிவர்த்தி* செய்து , பறித்து வந்து, சுத்தம் செய்து அத்துடன், நாட்டுச்செக்கில் ஆட்டிய தூய நல்லெண்ணெய் கலந்து, ஒரு மண் பாண்டத்தில் இட்டு , அதன் வாயைத் துணியால் சுற்றி, வெயிலில் 10 முதல் 15 நாட்கள் வரை புடம் போட வேண்டும், 
  
    இடையில் அந்தக் கலவையை எடுத்து , நல்ல துணியில் வடிகட்டி, மீண்டும் வெயில் புடம் இட வேண்டும், இப்படி 6 முறை வடிகட்டிய பிறகு கிடைப்பது தான், நேத்திரப்பூண்டுக் கண் தைலம்.
  
   அனைத்து வகை கண் நோய்களுக்கும் , கண் மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, கண் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல், கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள் போன்ற வற்றைப்போக்கும் சிறந்த தீர்வு, 

  கண்களைக் குளுமைப்படுத்தும், கண் குறைபாடு களையும், அற்புத மூலிகைத்தைலம் தான் , நேத்திரப்பூண்டு கண் தைலம்.

    தினமும் , கண்களில், ஒன்று முதல் இரண்டு சொட்டு விட்டு வர, 15 - 20 நாட்களில் , கண் நோய் யாவும் ஓடி விடும். <>

  தலையில் நீர் கோர்ப்பு, தலைவலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற சைனஸ் எனச் சொல்லப்படும், ஜலதோசத்தின் முற்றிய நிலை வியாதியை, முற்றிலும் நீக்கி விடும், இந்த நேத்திரப்பூண்டு கண் தைலம்!.

  இதன் இலையை மை போல் அரைத்து அடிபட்ட கை, கால் இணைப்பு பகுதிகளில் ஒரு முறை தடவ வலி குணமாகும், உடைந்த ஜவ்வு கூடும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-