October 19, 2021, 8:06 am
More

  ARTICLE - SECTIONS

  சளிப்புத்தரும் சைனஸ் பிரச்சினையா..? எளிய வீட்டு வைத்தியம்!

  Sinus
  Sinus

  மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வீட்டுக் கைமருத்துவத்தைப் பார்க்கலாம்.

  1. எஸன்ஷியல் எண்ணெய்கள்:
   தேவையானவை:
  • 3-4 துளிகள் நீலகிரி தைலம்
  • 3-4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்
  • 3-4 துளிகள் எழுமிச்சை எண்ணெய்
   அனைத்து எண்ணெய்களையும் கலந்து உங்கள் விரல்நுனிகளில் தடவுங்கள்
   உங்கள் கழுத்து, நெற்றி மற்றும் கழுத்தின் பின்னால் தடவுங்கள்
   இதை தினமும் சுவசிக்கும் போது மூக்கில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கும்.
  1. ஆப்பிள் சைடர் வினிகர்:
   இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 6 அவுன்ஸ் குடிநீரில் கலந்து குடிக்கவும். இதை கொண்டு நீங்கள் கொப்புளிக்கவும் செய்யலாம். இது உங்கள் உடம்பில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து, உடலை சீர்ப்படுத்தும்.
  2. வர மிளகாய் மிளகு டீ:

  தேவையானவை:

  • வர மிளகாய் பொடி 1 தேக்கரண்டி
  • தேன் 2 தேக்கரண்டி
  • எழுமிச்சை 1

  அனைத்து பொருட்களையும் வெந்நீரில் கலந்து குடித்தால், சளித்தொல்லை விடுபடும்.

  1. இஞ்சி:
   தேவையானவை:
  • 1-2 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  • 1 கப் வெந்நீர்

  இஞ்சியை வெந்நீரில் கலந்து சில நேரங்களுக்கு பின்பு வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு 3 கப் இஞ்சி டீக்கள் குடிக்கலாம். இஞ்சியில் பல நுன்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

  1. தேன்:
   தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும், இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு, கோழையை நீக்கி மூக்கு அடைப்புகளை சரி செய்யும்.
  2. டீடாக்ஸ் குளியல்:
   டீடாக்ஸ் குளியல் உங்கள் உடலை இதமாக மாற்றுவதுடன் அடைப்புகளை விடுபடச் செய்ய உதவும்.
   டீடாக்சஸ் குளியலிற்கு தேவையானவை:
  • எப்சம் உப்பு 1 கப்
  • பேக்கிங் சோடா 1 கப்
  • தேயிலை எண்ணெய் 8 துளிகள்
  • வெந்நீர்
  • பாத் டப்

  செய்முறை:
  அனைத்து பொருட்களையும் பாத் டப்பில் கலந்துவிடுங்கள். இதில் 15 நிமிடங்களுக்கு அமர்ந்து உங்கள் உடலை டீடாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

  1. ஆவி பிடித்தல்
   ஆவி பிடிப்பது ஒரு எளிமையான வழியாகக் கருதலாம். ஏனெனில் இதில் நீங்கள் எதையும் உட்கொள்ள வேண்டாம். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி அதில் சில எஸன்ஷியல் எண்ணெய் துளிகளை ஊற்றவும். ஆவி பிடிக்கும் போது மூக்கில் உள்ள அடைப்புகள் நீங்கி மூச்சு சீரடையும்.

  1.அதிமதுரம்.
  2.ஆடாதோடை.

  1. கண்டங்கத்திரி.
  2. சித்தரத்தை.
  3. தாளிசப்பத்திரி.
   6.திப்பிலி
   அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து சலித்து, வஸ்திரகாயம் செய்து பத்திரப்படுத்தவும். 1ஸ்பூன் பொடியை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க மேல் விட்டு 1/2 டம்ளராக வற்றியதும் மிதமான சூட்டில் குடிக்கவும்.

  பேரத்தை பொடி ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. இந்த பேரத்தை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒரு
  கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம். சைனஸ் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது

  இந்த ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் ஒரு கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக காய்ச்சி, தேன் கலந்து தொடருந்து அருந்திவர சைனஸ் குணமாகும்.

  இந்த தும்பை பூவானது சாலை ஓரங்களிலே காணப்படும் ஒன்றாகும். ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
  .வெற்றிலை நெஞ்சு சளி பிரச்சனைகளுக்கு மிக சிறந்த ஒரு தீர்வாக உள்ளது. வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

  சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக்காட்டலாம். இதனால் சைனஸ்
  பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற
  முடியும்.
  சைனஸ் தவிர்க்க வேண்டிய உணவுகள்
  பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை
  சுத்தமாக தவிர்க்க வேண்டும், குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உணவில் தடுப்பதால் சைனஸ் பிரச்சனை அதிகரிப்பதை
  தடுக்கலாம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-