பெண்கள் மாதவிலக்கை தள்ளி போடுவதற்காக பலவிதமான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அப்படி நாம் சாப்பிடும் போது நமது உடலில் பலவிதமான தீமைகள் ஏற்படும்.
உதாரணமாக வயிற்று வலி, வாய்க் கசப்பு, வயிற்றுப் புண், வாந்தி வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும். மேலும் அடுத்த முறை ஏற்பட கூடிய மாதவிடாய் சுழற்சி இந்த பாதிப்புகளால் முன்கூட்டியோ அல்லது சில நாட்கள் தள்ளியோ போக வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
ஆகவே செயற்கை முறையில் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை தவிர்த்து விட்டு இயற்கையாக எந்த உணவுகளை சாப்பிட்டால் மாதவிடாய் தள்ளி போகும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெள்ளரி:
பொதுவாகவே வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று. இதை நாம் சாப்பிடும் போது நமது உடலில் இருக்கும் வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் அதுமட்டுமல்லாமல் மாதவிடாய் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வந்தால் உடல் சூடு குறைந்து, மாதவிடாய் விலக்கு தள்ளிப் போகும்.
பொட்டுக்கடலை:
ஒருவேளை இன்று உங்களுக்கு மாதவிடாய் தேதியாக இருந்தால் காலையில் எழுந்ததும் பொட்டுக் கடலையை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட்டு தண்ணீர் அருந்தி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலம்.
சப்ஜா விதை :
திருநீற்று பச்சிலையின் சப்ஜா விதைகளை சிறிதளவு எடுத்து தயிரில் இட்டு அதை பருக வேண்டும். அதன்பின் மலை வாழைப் பழங்களை சாப்பிட்டு விட்டு சிறிது தண்ணீர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால் அன்றைய தினம் நிச்சயம் மாதவிடாய் வராது என்கின்றனர் முதியோர்.
தயிர் :
மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு தயிரைப் பருகி வர மாத விலக்கு தள்ளி போக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
வெந்தயம்:
வெந்தயம் நிச்சயம் நமது சமையலறையில் எப்போதும் இருக்கும் . இதை மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிதளவு வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, இந்த விலக்கு தள்ளிப் போகும்.
கஞ்சி :
மாதவிடாய் விலக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பே சோறு வடிக்கும் போது கிடைக்க கூடிய கஞ்சி தண்ணீரை சூட்டுடன் பருகி வர, அன்றைக்கு ஏற்படாமல் விலகி போகும்.