
வயிற்று கடுப்பு நீங்க
சிறிதளவு வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சரியாகி விடும்.
மூன்று ரூபாய் எடை கடுக்காய்ப் பிஞ்சை எடுத்து இலேசாக வறுத்துப் பொடி செய்து தேனில் ஒரு சிட்டிகைப் பொடியைக் குழைத்துச் சாப்பிட மூன்று நாளில் நல்ல குணாம் தெரியும்.
வயிற்று வலி தீர…
ஆகாதது அருகம்புல்லில் ஆகும் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! வயிற்று வலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையும் சமபங்கு எடுத்து கஷாயம் வைத்து 100 மி.லி. பருகி வர இரண்டொரு நாளில் வயிற்றுவலி குணமாகும். எடுத்தால் நல்ல மாவுச் சுக்காக வாங்கிப் பொடி செய்து அதைத் தேளில் குழைத்துச் சாப்பிட்டு வர இரண்டொரு வேளையிலேயே
சரியாகி விடும்.
வயிற்றுப் புண்ணா?
கவலை, மற்றும் அதீத உணர்வுகளால் வயிற்றில் அமிலம் சுரந்து வயிற்றில் புண் ஏற்படுகிறது. அத்தி இலையுடன் வேப்பிலையும் சம பங்கு சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட நாளடைவில் வயிற்றுப் புண் தீரும்.
வயிற்றுப்புண் வாய்ப்புண்ணை ஏற்படுத்தும். வலிக்கும். எரிச்சல் தோன்றும். இதற்கு மாங்கொட்டை பருப்பை மணத்தக்காளி சாறு
விட்டரைத்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழவில் உவர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை இரண்டு மாத்திரைகள் வீதம் ஆறு வாரங்கள் மோரில் அல்லது வெந்நீரில் சாப்பிட வயிற்றுப் புண் ஆறும்.
வயிற்று இரைச்சல் தீர…
வயிற்று இரைச்சல் தொல்லையைத் தவிர்க்க ஒரு டம்ளர் வெந்நீரில், ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை (நுளசியின் விதை) ஊற வைத்து குடிக்க வயிற்று இரைச்சல் போன இடம் தெரியாது.
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று இரைச்சலைப் போக்க அத்திக்காய்
சாற்றில் தயிர் கலந்து சிறிது ஓமத்தையும் நுணுக்கிப் போட்டு சாப்பிட
குணமாகும். பேதியும் நிற்கும். கறிவேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, வசம்பு மஞ்சள் இவைகளை சமமாக சட்டியிலிட்டு கருக்கி 2 லிட்டர் நீர் விட்டு 1/4 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டி தேன் கலந்து சாப்பிட சொருகல் பேதி, வாயுப் பொருமல், அஜீரணம் முதலியன
நீங்கி குணமடையும். ஓமத்தை நசுக்கி அத்துடன் பனைவெல்லத்தைக் கலந்து பிசைந்து இரண்டொரு உருண்டைகள் சாப்பிட வாயு கலந்து இரைச்சல் தீரும்.
வயிற்றில் பூச்சியா?”
குழந்தைகள் வயிற்றில் பூச்சி இருந்தால் உடனே வசம்பைச் சுட்டு பொடியாக்கித் தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். வயிற்றிலுள்ள பூச்சிகள் இறந்து விடும்.
மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ 5 மி.லி. விளக்கெண்ணெய், 5 மி.லி. வேப்பெண்ணெய் கலந்து உள்ளுக்குச் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழிந்த பின்பு உணவு சாப்பிட மலத்தோடு சேர்ந்து பூச்சிகள் வந்துவிடும்.