குடைமிளகாய் புலாவ்
குடைமிளகாய் – கால் கிலோ
அரிசி – அரை கிலோ
தனியா – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – ஒரு தேக்கரண்டி
கிராம்பு – 2
ஏலக்காய் – ஒன்று
பட்டை – சிறிய துண்டு
மிளகாய் வற்றல் – 2
காரட் – ஒன்று
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசியை நன்கு களைந்து நீரை வடிய விட்டு இலேசாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்து ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
குடைமிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தனியா, சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை போட்டு வதக்கவும். பிறகு தீயை குறைத்து வைத்துக் கொண்டு மிளகாய் வேகும் வரை மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது திறந்து பார்த்து கிளறி விடவும்.
கடைசியில் பொடி செய்த மசாலா மற்றும் உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
குடைமிளகாய் மசாலாவுடன் வேக வைத்த சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு நெய் ஊற்றி கலந்து வைத்து 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.
சாதத்துடன் துருவிய காரட்டை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான கேப்ஸிகம் பாத் ரெடி. இந்த குடைமிளகாய் சாதத்திற்கு வெங்காயம், பூண்டு சேர்க்க கூடாது. ஏனென்றால் குடைமிளகாயில் உள்ள வாசனை வெங்காயம், பூண்டு சேர்த்தால் தெரியாது