
ஒற்றைத் தலைவலிக்கு…
30 கிராம் ஒரு தலை வெள்ளைப் பூண்டு, 30 கிராம் பால் சாம்பிராணி. 30 கிராம் சந்தனம் இவற்றை ஆழாக்கு நல்லெண்ணெயில் தட்டிப் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து தலையில் தேய்த்து ஸ்நானம் செய்து வர ஒற்றைத் தலைவலி குணமாவதுடன் திரும்ப வராது.
கட்டி சரியாக…
சப்பாத்திக் கள்ளியில் பூக்கும் மஞ்சள் பூவின் இதழை மட்டும் எடுத்து கொஞ்சம் விளக்கெண்ணெய் விட்டு மை போல் அரைத்து கட்டியைச் சுற்றித் தடவி வர கட்டி உடையும். இதையே கட்டியின் மேல் வைத்துக் கட்டி வர புண்ணும் ஆறி விடும்.
வேப்பிலை ஒரு துண்டு, மஞ்சள் ஒரு துண்டு. சிறிது கற்பூரம் மூன்றையும் மை போல் அரைத்து கட்டியின் மேல் போட்டு வந்தால் எந்தக் கட்டியானாலும் உடையும் அல்லது அமுங்கி விடும்.
கண் கோளாறுகளால் வரும் தலைச் சுற்றலுக்கு…
இரவு படுக்கப் போகும் முன்பு திரிபலா சூரணம் சிறிதளவு எடுத்து சில துளிகள் தேனையும் அதிக அளவு நெய்யையும் சேர்த்துக் குழைத்து நக்கிச் சாப்பிட்டு வந்தால் தலைச் சுற்றல் குணமாகும். இது கண்களுக்கு வலிமையையும் சகிப்புத் தன்மையையும் வழங்கும்.
கக்குவான் இருமல் சரியாக…
சீயக்காய் ஒன்று, மஞ்சள் துண்டு ஒன்று, நாயுருவிக்கதிர் ஒன்று இவற்றை இரண்டு ஆழாக்குத் தண்ணீரில் போட்டு பாதியாக கண்டக் காய்ச்சி வைத்துக் கொண்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் காலை. மாலை மூன்று நாள்கள் சாப்பிட கக்குவான் இருமல் குணமாகும்.
ஆசனக் கடுப்பு சரியாக…
பிரண்டையைக் கொண்டு வந்து நறுக்கி வதக்கி துவையல் அரைத்து (சிறிது மிளகாய், உப்பு சேர்த்து) கொட்டைப் பாக்களவு காலை, மாலை சாப்பிட்டு வர ஆசனக் கடுப்பு மாறும். இரத்த மூலமும் குணமாகும்.