health tips - 2026

அப்பாச்சி தீர்வு: விறைவீக்கம், வயிற்றுப்பூச்சி, வயிற்றுக்கடுப்பு, கிராணி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

விரை வீக்கம் சரியாக…

பவள மல்லிகையை இளஞ்சூடாக வதக்கி விரையின் மீது வைத்துக் கட்டி வர சில நாள்களில் வலியும் குறையும். வீக்கமும் மறையும்.

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய…

வாதநாராயண இலையை சுத்தம் செய்து நீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி மிளகு. சீரகம், மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றைப் போட்டு சிவக்க வறுத்துப் பொடித்து வெந்தணலில் போட்டு சிறிது உப்பு, சேர்த்து கொதி வந்ததும் சிறிது நீர் ஊற்றி இறக்கி கடுகு தாளித்து கொட்டவும்.

இந்த ரசத்தை சாப்பிட சிறிது நேரத்தில் பேதியாகும். கீரைப் பூச்சிகள், குடல் பூச்சிகள் வெளியேறும். வாயுக்கோளாறு, கை. கால் பிடிப்பு போன்றவையும் குணமாகும்.

ஆளிவிதையில் மருத்துவம்

ஆளி விதையை அரைத்து சாப்பிட்டு வர சீதபேதி நிற்கும். அஜீரணம் குணமாகும். கப நோய்கள், சரும வியாதிகள் கூட இதனால் குணமாகிறது.

வயிற்றுக் கடுப்பு நீங்க…

கசகசாவை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு சரியாகிறது.

கிராணி சரியாக…

திராட்சை விதைகளை தூள் செய்து வேளைக்கு ஒரு சிட்டிகை அளவு காலை, மாலை வெண்ணெயிலோ அல்லது நீரிலோ சாப்பிட்டு வர நீண்டகால வயிற்றுப் போக்கு கிராணி குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.