இந்தியா முழுவதும் இன்று 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் நிலவி வருகிறது.
அத்துமீறிய பாகிஸ்தானை அதிரவைத்த இந்தியா !
Popular Categories



