ஓர் ஆண்டுக்குள்… 8 பேர்…! முக்கியத் தலைவர்கள் மரணங்களால் பாஜக., ‘ஷாக்’!

Published:

vajpayee arunjaitley sushma parikhar anandkumar - 2026

பாஜக.,வின் முக்கிய தலைவர்கள் 8 பேர் ஒரே ஆண்டில் மரணம் அடைந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த ஓராண்டுக்குள் பாஜகவின் 8 முக்கியத் தலைவர்கள் காலமாகி விட்டனர். நேற்று காலமான அருண் ஜேட்லி, 66 வயதில் காலமானார்.

இதற்கு முன்பாக சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை பாஜக வரிசையாக இழந்துள்ளது.

சட்டிஸ்கரின் முன்னாள் ஆளுநர் பால்ராம்ஜி, தில்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானா, அனந்தகுமார் உள்ளிட்ட தலைவர்களையும் பாஜக இழந்துள்ளது.

மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் பாபுலால் கௌர் கடந்த 21ம் தேதி காலமானார். கட்சியில் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, தலைவர்களாக பரிமளித்தவர்கள் வரிசையாக காலமான நிலையில், அடுத்த கட்டத்தில் உள்ள இளையவர்கள் தலைவர்களாக வளர்ந்து வருகின்றனர்.

பாஜக.,வில் அடிமட்டப் பொறுப்பில் இருப்பவரும் தங்கள் பணிகளாலும் ஆற்றலாலும் மேல் மட்டத்துக்கு வரமுடியும்.

மூத்த தலைவர்கள் பலர் காலமான நிலையில், மோடி அரசில் உள்ள இளையவர்கள் சிலர் அடுத்தக்கட்ட தலைவர்களாக உருவாகி வருகிறார்கள். கட்சி ஜனநாயகம் அடிப்படைக் கட்டமைப்பில் இருந்து சரியாக இருப்பதால், இவ்வாறு கட்சி வலுப்பெற்று வருவதாக பாஜக.,வினர் கூறுகின்றனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img