
ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து.. 16 பேர் மரணம்.!
நவம்பர் 12 நேற்று மதியம் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் 17 பேர் கொண்ட பயணிகள் வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 16 பேர் மரணமடைந்தனர்.
‘கோவா கிராமம்’ திருப்பத்தில் டிரைவர் வாகனத்தை கட்டுப் படுத்த இயலாமல் போனார். இதை அடுத்து, அந்த வாகனம் 250 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது .
சம்பவம் நடந்த இடத்திலேயே 12 பேர் இறந்தனர். மேலும் நான்கு பேர், மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபின் இறந்தனர். ஒருவரின் உயிர் ஊசலாடுகிறது.
இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். மூன்று குழந்தைகள். விபத்து பற்றி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.