
உத்திரபிரதேசம் குஷிநகர் எஸ் பி வினோத் குமார் மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில் குஷிநகர் பகுதியில் உள்ள பைராகிபட் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு மசூதியில் கடந்த 11ஆம் தேதி ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது
மசூதியின் கதவுகள் ஜன்னல்கள் சிதறிய தோடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன இதுகுறித்து மசூதி நிர்வாகத்தினரிடம் உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
அவர்கள் மசூதியில் இருந்த ஒரு இன்வர்ட்டர் பேட்டரிகளை திடீரென வெடித்துச் சிதறிய கூறியுள்ளனர் ஆனால் வெடிவிபத்து பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திய தடயவியல் நிபுணர்கள் மசூதிக்குள் வெடிகுண்டுகள் வெடித்து இருப்பதாக அறிக்கை அளித்தனர்
இதையடுத்து தீவிரவாத எதிர்ப்புப் படை மற்றும் உளவுத் துறை உயர் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை தொடங்கியது மசூதி இமாம் அஜ்முதீனிடம் நடத்திய விசாரணையில் அவரும் மசூதியில் தங்கியிருந்த 7 இளைஞர்களும் மசூதிக்குள் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்
இதையடுத்து அவரும் அவரது கூட்டாளிகளான இஜார், ஆஷிக், ஜாவேத் ஆகிய மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் தலைமறைவாகிவிட்ட மீதமுள்ள மூன்று பேரை தேடுவதற்கான பணி தொடங்கியுள்ளது
மசூதிக்குள் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்களை வைத்து இவர்கள் குண்டுகளை தயாரித்த போது திடீரென வெடித்து இருப்பதாக தோன்றுகிறது எந்தவிதமான நோக்கில் வெடி பொருட்களை பதுக்கி வைத்தல் குண்டு தயாரிப்பு ஆகியவை நடந்தன பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதை கண்டறிய தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று எஸ்பி கூறினார்