
சிறுமி தீப்திஸ்ரீயின் சோக முடிவு காகிநாடா மக்களை உலுக்கி எடுத்துள்ளது. தீப்திஸ்ரீயின் உடலை வெளியில் எடுத்த தர்மாடி சத்தியம் குழுவினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
காகிநாடாவில் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன சிறுமி தீப்திஶ்ரீயின் கதை சோகத்தில் முடிந்தது. உப்புடேறு என்ற நதியில் சிறுமியின் உடலை வெளியில் எடுத்த தர்மாடி சத்தியம் குழுவினனர் மன பாரத்தால் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ட்ராஜடிக்குக் காரணம், சிறுமியைக் கொன்று மூட்டை கட்டி உப்புடேறு நதியில் வீசி எறிந்த சித்தி தான்!
கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் காணாமல் போன சிறுமியின் உடல் மூட்டையாக கண்டெடுக்கப்பட்டது. உப்புடேறுவில் தேடலைத் தொடங்கிய தர்மாடி சத்யம் குழு நேற்று, திங்கள் மதியம் சிறுமியின் உடலைக் கண்டு பிடித்தனர்.
தீப்தியைக் கொன்று மூட்டைகட்டி உப்புடேறுவில் யாரோ தூக்கி எறிந்துள்ளதாக அவர்கள் தீர்மானத்துக்கு வந்தனர். பின்னர், சிறுமியின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். மூன்று நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய ‘காணாமல் போன சிறுமியின் பரபரப்புச் செய்தி, சோகத்தில் முடிந்தது.

காகிநாடா ‘பகடால வேட்ட ‘ என்ற பகுதியைச் சேர்ந்த சத்ய ஷ்யாம் குமார், சத்யமணி இருவரும் தம்பதிகள். தீப்திஸ்ரீ அவர்களுக்கு ஒரே மகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்தியமணி உடல் நலமின்றி இறந்து போனார்.
ஷ்யாம்குமார் இரண்டாவதாக சாந்திகுமாரியை மணந்தார். அவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். ஏழு வயது தீப்திஶ்ரீ உள்ளூர் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள்.
மூன்று நாட்கள் முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமியை மதியத்திலிருந்து காணவில்லை. பள்ளியருகில் விசாரித்த சிறுமியின் தந்தை, மகளை யாரோ கடத்தி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஒரு பெண்மணி வந்து தீப்திஶ்ரீயை பள்ளியிலிருந்து அழைத்து சென்றதை கண்டறிந்தனர்.
அதனால் தன் மனைவி சாந்திகுமாரி மீது சந்தேகம் வெளிப்படுத்தினார் ஷியாம் குமார். தன் கணவன் முதல் மனைவியின் மகள் மீது அதிக அன்பு செலுத்துவதாக குற்றம் சாட்டி தீப்திஶ்ரீயை சித்திரவதை செய்து வந்தாள் சாந்திகுமாரி.
வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டி வந்தாள். சிறுமியின் உடலில் சிற்றன்னை பல முறை சூடு போட்டுள்ளாள். போலீசார் விசாரணையில் சாந்திகுமாரி குற்றத்தை ஒப்புக்கொண்டாள்.
பள்ளியில் இருந்து சிறுமியின் முகத்தை மறைத்து அழைத்துச் சென்றதை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்தனர். வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தில் டவலைச் சுற்றி இறுக்கிக் கொன்று உடலை சஞ்சய் நகரிலிருந்து பைக் மீது இந்திராபாலம் பிரிட்ஜ் அருகில் எடுத்து வந்து உப்புடேறுவில் வீசி எறிந்ததாக ஒப்புக் கொண்டாள்.
நதியில் இருந்து உடலை மீட்டு எடுக்க போலீசார் தர்மாடி சத்யம் குழுவினரின் உதவியை நாடினர். 15 பேர் கொண்ட குழு ஞாயிறு முதல் உப்புடேறு நதியில் தேடுதல் வேட்டையில் இறங்கி திங்கள் மதியம் உடலை வெளியே எடுத்தனர்.
குழந்தை தீப்தியை எண்ணி தந்தையோடு கூட உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் கண்ணீர் விட்டு கதறினர்.
தன் மனைவியை நடுரோடில் வைத்து தூக்கிலிடும்படி சிறுமியின் தந்தை கதறினார். தாயற்ற மகளை கவனித்துக் கொள்வாள் என்று மறுமணம் செய்து கொண்டேன். இப்படி கொடூரமாக கொன்று விட்டாளே பாதகி என்று அழுது துடிக்கிறார்.