
எல்லைக் காவலில் வீரத்தோடு போராடிய ஜவான் மனைவியிடம் தோல்வி அடைந்தார். சித்தூரில் நிகழ்ந்துள்ள சோகமான நிகழ்வு இது…
நாட்டு எல்லையில் உயிரைப் பணயம் வைத்து போராடிய வீர ஜவான் வீட்டில் மனைவியிடம் தோற்றுப்போனார். மனைவியின் கடினமான சொற்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தீவிரமான மன வேதனைக்கு ஆளாகி கையில் இருந்த ரிவால்வரால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியது.
பார்டரில் பகைவர்களோடு வீரத்தோடு போராடி தன் சாமர்த்தியத்தைக் காட்டிய வீர ஜவான் மனைவியை வெற்றிகொள்ள இயலாமல் குடும்ப கலகங்களுக்கு பலியாகிப் போன சோக சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தினமும் சண்டையோ சண்டை போட்டு விவாதத்தில் ஈடுபட்டு எரிச்சலடையச் செய்த மனைவியால் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் ஒரேடியாக மயானத்திற்கு சென்று ரிவால்வரால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்!
கேனீபல்ல மண்டலம் கர்னெமிட்டா பஞ்சாயத்து எல்லைக்குள் வரும் கொண்டாரெட்டிவாரி பல்லெம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்தராமு (49) பார்டரில் செக்யூரிட்டி ஃபோர்ஸ் ல் (பிஎஸ்எஃப்) பணியாற்றி ரிடையர் ஆனார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு பதவி ஓய்வு பெற்ற சித்தராமு குடும்பத்தாரோடு திருப்பதியில் உள்ள சுந்தரையா நகரில் வசித்து வருகிறார். அவருக்கு மனைவி சாரதா, இரு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் இன்டர் படிக்கிறான். மற்றொரு மகன் டிகிரி படிக்கிறான். ஆனால் சித்தராமுவுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி விவாதங்கள் நடந்து வந்தன.
முந்தைய நாள் இரவு கூட மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடினமான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாக தெரிகிறது. நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியேறிய சித்தராமு சற்று தொலைவில் இருந்த மயானத்திற்குச் சென்று அங்கு தன் ரிவால்வரால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
விடியற்காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அடையாளம் கண்ட உள்ளூர்வாசிகள் வீட்டாருக்கும் போலீசாருக்கும் செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உடல் அருகிலேயே மது கலந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலும் ரிவால்வரும் கிடந்தன. மனைவியோடு ஏற்பட்ட சண்டையால் நள்ளிரவில் மயானத்திற்கு வந்த ஜவான் சித்தராமு மது அருந்திய பின் தனது கைத்துப்பாக்கியால் நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு உள்ளாகி இருப்பார் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
டெல்லியில் பணியில் ஈடுபட்டு வந்த நேரத்தில் பாதுகாப்புக்காக சித்தராமு ரிவால்வர் வாங்கியிருந்தார் என்றும் அதனை சித்தூர் ஜில்லாவுக்கு மாற்ற வேண்டும் என்று ஏற்கெனவே விண்ணப்பம் அளித்து உள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர். அந்த ரிவால்ரால்தான் சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தெரிவித்தனர்.



