புது தில்லி: மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதா ஏழை விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த பாத யாத்திரையை அன்னா ஹசாரே திடீரென ஒத்தி வைத்துள்ளார். முன்னதாக, இந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 1100 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். மகாராஷ்டிரத்தின் வார்தா காந்தி ஆசிரமத்தில் இருந்து இந்த பாதயாத்திரை தொடங்கும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் இது நிறைவடையும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த பாதயாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் தத்தா தனியார் டி.வி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப் படுத்தும் மசோதா எதிர்ப்பு: அன்னா ஹசாரே பாதயாத்திரை ஒத்திவைப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

