புதுதில்லி:
‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நாடுகள் பங்கேற்கும் 9ஆவது ‘பிரிக்ஸ்’ மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீன செல்ல உள்ளதாக வெளியுறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



