
பெண்களின் மீது நடக்கும் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாடெங்கிலும் வரிசையாக நடந்து வரும் இந்த சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. வீட்டிலிருந்து வெளியே செல்வது என்றாலே பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் என்ன ஆகும் என்பதை பக்கத்தில் ஒதுக்கி வைத்தாலும்… பட்டப்பகலிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிகிறது.
அண்மையில் தெலங்காணா விகாரபாத் மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விகாராபாத் அருகிலுள்ள கோடிபல்லி பிராஜக்ட் அருகில் ஒரு இளம்பெண்ணைப் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணைக் கொலை செய்த அடையாளம் தெரியாதவர்கள் கோட்டிபல்லி அணையின் கீழ் இறந்த சடலத்தை புதைத்து வைத்தார்கள். உடலை ஒரு கவரில் சுற்றி புதைத்து வைத்திருந்தார்கள் அந்த கொடூரமானவர்கள்.
மாடு மேய்ப்பவர்கள் பார்த்து போலீசாருக்கு செய்தி தெரிவித்ததால் உடலை வெளியே எடுத்து போஸ்ட்மார்ட்டத்திற்காக அனுப்பினார்கள். இறந்த பெண் யார் இங்கு ஏன் வந்தாள் கொலைக்கு காரணம் என்ன என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நான்கு நாட்களுக்கு முன்பே கொலை செய்து புதைத்து இருப்பதாக சந்தேகம் வெளியிட்டனர் போலீசார்



