
கிறித்தவ கிராமங்களை ஏற்படுத்துவதற்கு மாஸ்டர் திட்டம் வகுத்த பாஸ்டர் பிரவீன்குமார் கைதானார். இவர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவாகியுள்ளது. இதுவரை 699 கிராமங்களை கிறிஸ்துவ வில்லேஜ்களாக மாற்றியதாக கூறிக்கொள்ளும் பிரவீன், கிறிஸ்தவ கிராமங்களை ஏற்படுத்துவதற்காக இந்து கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக கூறுகிறார். பிரவீனுடைய வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் ஒரு நன்கொடையாளரோடு பிரவீன் சக்கரவர்த்தியின் உரையாடல் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
61ஆயிரம் டாலர் தொகையை இந்த வேலைகளுக்காக தாம் சேகரித்திருப்பதாக அந்த அமெரிக்கர் தெரிவிக்கிறார்.
தம் அசோசியேஷனில் மொத்தம் 3642 பேர் பாஸ்டர்கள் இருப்பதாகவும் இதுவரை ஆந்திராவில் 699 கிறிஸ்தவ கிராமங்களை அமைந்திருப்பதாகவும் அடுத்த மாதத்தில் 700 முழுமையாக செய்வோம் என்றும் அமெரிக்காவிலுள்ள நன்கொடையாளரிடம் பிரவீன் தெரிவிக்கும் உரையாடல் கவலை அளிப்பதாக உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
மதமாற்றத்தை உற்சாகப்படுத்தி கிராமங்களில் உள்ள கோவில் சிலைகளை சேதம் செய்ததாக பிரவீண் கூறும் ஒரு வீடியோ ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கிறிஸ்து கிராமம் என்றால்… அந்த ஊரில் இருக்கும் மக்கள் அனைவரையும் மதமாற்றம் செய்து அந்த கிராமத்திலிருக்கும் ஹிந்து தெய்வச் சிலைகளை சேதப்படுத்துவது. இதுவே இவர்களின் குறிக்கோள். தானே நேராக தன் கையால் நூற்றுக்கணக்கான சிலைகளை உடைத்ததாக பாஸ்டர் பிரவீன் சக்கரவர்த்தி கூறுவது கவனிக்கத்தக்கது.
ஒரு கிராமத்தில் ஒரு பாஸ்டர் வந்து தங்கிக் கொண்டு தன் வேலையை தொடங்குவார். கிராம மக்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவத்தை ஏற்கும்படி செய்வார். அவர்களைக் கொண்டே கோவில் மரங்களையும் கல் விக்கிரகங்களையும் உடைக்கச் செய்வார். அதன்பின் அந்த கிராமத்தை கிறிஸ்தவ வில்லேஜாக அறிவிப்போம் என்று அவர் கூறுகிறார்.
நானே என் கையால் பல கிராமங்களில் உள்ள கோவில் மரங்களையும் கல் விக்கிரகங்களையும் உடைத்துள்ளேன். கிராம மக்கள் பார்த்திருக்கையிலேயே… அவர்களின் முன்னிலையிலேயே செய்வேன். அவர்கள் சொல்வார்கள்… ‘பிரவீன்! நீயே முதலில் மரத்தை வெட்டி சிலையை உடையுங்கள். இவையெல்லாம் வெறும் அபத்தம். நாங்கள் தொடருகிறோம்” என்று. பல தெய்வச் சிலைகளின் தலைகளை நானே என் கையால் உடைத்துள்ளேன். அதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் கூறும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திராவில் கோவில் சிலைகளை சேதப்படுத்திய குண்டர்களை கண்டு பிடிக்க இயலாமல் போலீசார் குழம்பி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் தானே இத்தகைய வேலைகளைச் செய்துவருவதாக விளம்பரப்படுத்திக் கொண்ட பாஸ்டர் பிரவீண் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்துள்ளதை ஹிந்துக்கள் முக்கிய சம்பவமாகப் பார்க்கின்றனர். இவருக்கு போலீசார் தண்டனை விதிப்பார்களா அல்லது விசாரணை செய்து விட்டுவிடுவார்களா ஏன்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.