
விமானத்தில் பயணம் செய்த கேரளா பெண்ணை, பாலியல் துன்புறுத்தல் செய்த ஆண் பயணி.
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த பெண், கடந்த திங்கள் கிழமை (யுகே 885) விமானத்தில் தில்லியிலிருந்து இருந்து கொச்சிக்கு சென்றார். முன் சீட்டிலிருந்த அந்தப் பெண்ணை பின் சீட்டிலிருந்த சக ஆண் பயணி தனது கைகளை விட்டு தடவி தொடர்ந்து சில்மிஷம் செய்திருக்கிறார்.
முதலில் இது தற்செயலாக நடந்ததிருக்கும் என்று அந்த பெண் நினைத்தார். ஆனால் இது தொடர்ந்து நடந்ததால் அந்த பெண் சிறிது நகர்ந்து உட்கார்ந்திருக்கிறார்.
ஆனாலும் அவர் நிறுத்தவே இல்லை. அதனால் அந்த பெண், செல்போனில் நடப்பதை எல்லாம் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோவை விமான பணிப்பெண்ணிடம் காண்பித்து புகார் அளித்துள்ளார்.
விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகள் அவரை விசாரித்து மன்னிப்பு கேட்குமாறு கூறினார். நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருப்பதாக கூறினார். பாதிக்கப்பட்ட பெண் இந்த செயலை சட்டபூர்வமாக அணுகப் போவதாக கூறினார் .
விமான நிறுவன அதிகாரிகள் இந்தப் பாலியல் கொடுமையை கண்டிப்பதாகவும் , அந்தப் பெண்ணுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினர் .