
கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1 முதல் தொடங்கும் என்று மத்திய அரசு கடந்த புதன்கிழமை அறிவித்தது.
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்திருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் 20 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள், 10 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளொன்றுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் செஷன்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-WIN Appஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், Co-WIN App, ஆரோக்ய சேது ஆப் அல்லது cowin.gov.in தளம் மூலம் எவ்வாறு ரெஜிஸ்டர் செய்வது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்,
Co-Win app, Aarogya Setu app அல்லது cowin.gov.in தளத்தை லாக் இன் செய்யவும். மொபைல் எண்ணை டைப் செய்யவும். உங்களுக்கு மொபைலுக்கு OTP எண் வரும். அதன் மூலம் உங்கள் அக்கவுண்ட்டை திறக்கலாம்.
உங்கள் பெயர், வயது, பாலினம் ஆகியவற்றை குறிப்பிட்ட பிறகு, உங்கள் அடையாள அட்டையை பதிவேற்றுங்கள்.
45 வயதுக்கு மேற்பட்டோர் என்றால், மருத்துவரிடம் பெறப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்கவும்.
எந்த செண்டர் வேண்டும் என்பதையும், எந்த தேதியில் தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் நீங்களே தேர்வு செய்யலாம். ஸ்மார்ட் போன் வசதி இல்லாத பெரியவர்கள், இதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள செண்டருக்கு சென்று ரெஜிஸ்டர் செய்யலாம் அல்லது 1507 எனும் கால் செண்டர் எண்ணுக்கு அழைக்கலாம்.