தன் சுவாசம் கொடுத்து கணவனை காப்பாற்ற துடித்த மனைவி!

இந்தியா சற்றுமுன்
up
up

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் ஆக்சிஜன் இன்றி உயிர் இழக்கும் முன் மனைவி கணவருக்கு உயிர் சுவாசம் கொடுக்க முயன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இது ஒருபுறம் இருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டு வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு ஆக்சிசன் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்து ஆக்சிஜன் இன்றி உயிரிழக்கும் உன் கணவனுக்கு இறுதி நிமிடத்தில் மனைவி ரேணு சிங்கால் உயிர் சுவாசம் கொடுத்த நெஞ்சை உலுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இருந்தாலும் பரவாயில்லை தனது கணவரை எப்படியாக பிழைக்க வைக்க வேண்டும் என்று கடைசி நிமிடம் வரை அவர் போராடியும் பயனளிக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.