
தெலுங்கானா ஹைதராபாத் பகுதியில் இருக்கின்ற ராம்கிருஷ்ணாபுரத்தில் தன்னுடைய 25 வயதான மகன் மற்றும் 65 வயதான தனது தாயுடன் ஒரு பெண் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் மகன் தனியார் ட்ராவெல்ஸ் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
எனவே, அன்றாடம் அளவுக்கதிகமாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த வாரம் மே 16ம் தேதி அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது விதவை தாயை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
இதனால், அந்த தாயும், பாட்டியும் சேர்ந்து இளைஞரின் கழுத்தை நைலான் கயிறால் நெரித்து கொன்றுள்ளனர்.
இறந்த பின்னர் அந்த இளைஞரின் உடலை அந்த வீட்டிற்குள் ஒரு பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.
அந்த இளைஞரை சில நாட்களாக காணவில்லை என்று அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர்.