மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா சற்றுமுன்
manmohansing 2
manmohansing 2

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து செய்தி வெளியானது.

ஆனால், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.