ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குண்டா பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து 12 அடி உயர ராஜ நாகப்பாம்பை வனத்துறையினர் நேற்று மீட்டனர்
உயிருடன் மீட்டக்கப்பட்ட ராஜா நாகப்பாம்பின் உடல்நிலை பரிசோதித்து, அதன் பிறகு இயற்கை வாழ்விடத்திற்கு விடப்பட்டது என்று வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இராச நாகம் (King Cobra) அல்லது கருநாகம் என அழைக்கப்படும் பாம்பு இனம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிகமாக வசிக்கிறது. இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு (Venomous Snake) ஆகும்.
இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன.
இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.
Odisha: Forest Department rescued a 12-feet king cobra from an abandoned well in Khunta area of Mayurbhanj district yesterday.
— ANI (@ANI) November 10, 2021
"The health of the king cobra was verified and then released into its natural habitat," a forest officer said. pic.twitter.com/zShQu31WnJ