
மத்திய அரசிற்கு உட்பட்ட டாடா மெமோரியல் சென்டரில் (TMC) காலியாக உள்ள உதவி கணக்கு அதிகாரி, உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 95 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிர்வாகம் : டாடா மெமோரியல் சென்டர் (TMC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 95
பணி : Administrative Officer, Deputy Controller of Accounts, Assistant Accounts Officer, Assistant, Lower Division Clerk மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 07.12.2021 தேதியில் அதிகபட்சம் 27 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் பட்டம் பெற்றவர்கள், ICWAI, CA, MBA (Finance), முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாப்பு பணிக்கு முன்னாள் இராணுவத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.67,700 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tmc.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 300
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tmc.gov.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.