
இன்னும் இரு வார காலத்திற்கு திருப்பதி பக்கம் வந்துடாதீங்க என்பது கேட்டுக்கொண்டிருக்கிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக திருப்பதியில் அலிபிரி பகுதியில் நடைபாதை முழுவதும் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனிடையே கனமழை காரணமாக திருப்பதி செல்லும் மலைப்பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது
திருப்பதி – திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும், இரண்டாவது மலைப்பாதையின் வழியில் இரு வெவ்வேறு இடங்களில் கடும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் பக்தர்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று, முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
10-15 நாட்களுக்கு பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றும், சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.